தமிழகத்தில் தாமரை மலராது: சீமான்
சென்னை:
தமிழகத்தில் தாமரை ஒருபோதம் மலராது… தமிழக பாஜக தலைவர் தமிழிசையின் உயிரும் போகாது என்று நாம் தமிழர் கட்சி தலைவர் சீமான் கூறினார்.
சமீபத்தில் நிக்ழச்சி ஒன்றில் பேசிய, தமிழக பா.ஜ.க தலைவர் தமிழிசை, ‘தமிழகத்தில் தாமரையை அரியணை ஏற்றாமல் என் உயிர் போகாது’ என கூறினார்.
இதுகுறித்து சமூக வலைதளங்களில் நெட்டிசன்கள் கடுமையாக விமர்சித்து வருகின்றனர். இந்த நிலையில், செய்தியாளர்கள் நாம் தமிழர் கட்சி தலைவர் சீமானிடம் கருத்து கேட்டனர்.
அதற்கு பதில் அளித்த சீமான்,, “தமிழகத்தில் தாமரை மலராது; தமிழிசையின் உயிரும் போகாது. அவர் நீண்ட காலம் நல்ல ஆரோக்கியத்துடன் இருக்க வாழ்த்துக்கள்” என கூறினார்.
மேலும், ராஜீவ் கொலைவழக்கு கைதிகள் விஷயத்தில், ஆளுநர் காலதாமதம் செய்யாமல் 7 பேரையும் விடுவிக்க ஒப்புதல் வழங்க வேண்டும் என்ற சீமான், எச்.ராஜா மீது எடுக்கப்படாத நடவடிக்கை, கருணாஸ் மீது மட்டும் எடுக்கப்பட்டது ஏன்? என்றும் கேள்வி எழுப்பினார்.