சாராவின் காலில் விழுந்து நன்றி தெரிவித்த கார்த்திக் ஆர்யன்….!

இம்தியாஸ் அலி இயக்கத்தில் ’லவ் ஆஜ் கல்’ திரைப்படத்தில் சாரா, கார்த்திக் ஆர்யன் நடித்துள்ளனர்.

’லவ் ஆஜ் கல்’ திரைப்படத்தின் ட்ரெய்லர் வெளியீட்டு விழா மும்பையில் சில நாட்களுக்கு முன் நடந்தது. இதில் படத்தின் நாயகன், நாயகி, இயக்குநர் எனப் பலரும் கலந்துகொண்டனர்.

நிகழ்ச்சியில் கார்த்திக் ஆர்யன் சாராவின் காலைத் தொட்டு வணங்கினார். முதலில் அதிர்ச்சியடைந்த சாரா, பின் இந்தச் செயலைப் பார்த்துச் சிரித்தார். இந்தக் காணொலி இணையத்தில் வைரலாகப் பகிரப்பட்டு வருகிறது.