வெளியானது ரொமான்டிக் காமெடி ‘லவ் ஆக்ஷன் டிராமா’ டீஸர்…!

மலையாளத்தில் தயான் ஸ்ரீனிவாசன் இயக்கத்தில் நிவின் பாலி – நயன்தாரா இணைந்து நடித்துள்ள ‘லவ் ஆக்‌ஷன் டிராமா’ படத்தின் டீஸர் வெளியாகியுள்ளது .

நீண்ட நாட்கள் கழித்து மலையாளத்தில் நயன்தாரா ஒப்பந்தமான படம் இது என்பது குறிப்பிடத்தக்கது.

துர்கா கிருஷ்ணா, அஜு வர்கீஸ், பாஷில் ஜோசப், ஸ்ரீனிவாசன், மல்லிகா சுகுமாரன் உள்ளிட்ட பலர் இதில் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

இந்நிலையில், ‘லவ் ஆக்‌ஷன் டிராமா’ படத்தின் டீசரை வெளியிட்டுள்ளது படக்குழு . ஓணம் பண்டிகைக்கு இந்தப் படம் திரைக்கு வரவுள்ளது.

இந்த கட்டுரையைப் பற்றி உங்கள் கருத்துகளை பதிவு செய்யவும்


Tags: Dhyan Sreenivasan, Love action drama, nayanthara, Nivin Pauly, Official Teaser, Shaan Rahman
-=-