காதலுக்கு கொரோனா வார்டிலும் கண் இல்லை… அரசு மருத்துவமனையில் ருசிகரம்…

சென்னை:

ன்றைய சூழலில்  உலக நாடுகளையும், மக்களையும் மிரட்டி வருகிறது கொரோனா.  நாளை என்ன நடக்குமோ என்ற பீதியில் மக்கள் நடமாடிக்கொண்டிருக்கிறார்கள்.  தமிழகத்திலும் கொரோனா தாக்கம் நாளுக்கு நாள் தீவிரமாகிக்கொண்டே செல்கிறது. ஆனால் காதலுக்கு கண் இல்லை என்பது கொரோனா வார்டில்சிகிச்சை பெற்று வந்த இரு இளசுகளின் மூலம் நிரூபணமாகி உள்ளது.

இந்த அதிர்ச்சிகரமான சூழலில், கொரோனா சிகிச்சைக்காக, அரசு மருத்துவமனையின் கொரோனா வார்டில் சேர்க்கப்பட்டவர்களில்  இளம்வயதை சேர்ந்த 2 பேர் காதல் வயப்பட்டு, தனியாக அமர்ந்து, தொடர்ந்து மொக்கைப் போட்ட சம்பவம், சக நோயாளிகளுக்கு குதூகலத்தை ஏற்படுத்திய நிலையில், உயிரை பணயம் வைத்து சேவை செய்து வரும்  மருத்துவர்கள் மற்றும் செவிலியர்களுக்கு அதிர்ச்சியையும், ஆத்திரத்தையும் ஏற்படுத்தி உள்ளது.

சென்னையில் உள்ள அரசு மருத்துவமனை ஒன்றில் கொரோனா வார்டில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்றுவந்த  இளைஞர் ஒருவருக்கும் இளம்பெண் ஒருவருக்கும் திடீர் காதல் ஏற்பட்டுள்ளது. முதலில் நட்பாக பழகிய அவர்கள் இருவரும், தங்கள் குடும்ப கதைகள், சொந்த கதை, சோக கதையை பேசி காதலர்களாக மாறியுள்ளனர்.

காதல் மோகம் தீவிரமானதும், அந்த காதல் ஜோடி, வார்டுகுள்ளேயே காதல் பார்வை, ஜொள்ளு, சில்மிஷம்  போன்றவற்றில் இறங்கியுள்ளனர். இது அங்கிருந்த சில நோயாளிகளுக்கு ஆத்திரத்தை வரவழைத்தாலும், பெரும்பாலோர் அவர்களின் சேட்டைகளைக் கண்டு தங்களை ஆசுவாசப்படுத்தி வந்துள்ளனர்.

தொடக்கத்தில் இளசுகளின் நடவடிக்கைகளை கண்டுகொள்ளாத செவிலியர்களும், மருத்துவர் களும், நாளடைவில் அவர்களின் சேட்டை மற்றும், அவ்வப்போது விதிகளை மீறி, வார்டின் எங்காவது ஒரு ஓரத்திற்கு சென்று தனியாக அமர்ந்து மொக்கைப் போட்டு வருவது அதிகரித்து வந்துள்ளது.

இந்த நிலையில், கொரோனா வார்டில் இருந்த அந்த காதல் ஜோடி திடீரென மாயமாகி விட்டது. இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அவர்களை தேடும் பணியில் மருத்துவமனை ஊழியர்கள் தீவிரம் காட்ட,  காதல் ஜோடி மருத்துவமனை வளாகத்தில் உள்ள ஒரு மறைவான இடத்தில் அமர்ந்து மொக்கைப் போட்டுக்கொண்டிருந்தது தெரியவந்தது.

அவர்களை மீண்டும் கொரோனா வார்டுக்கு அழைத்துவந்த மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள், அவர்களுக்கு, நாக்கைப் பிடுக்கிக்கொள்ளும் வகையில்  நன்றாக பாடம் எடுத்து, இருவரையும் தனித்தனி வார்டுகளுக்கு மாற்றி உள்ளனர்.

தங்களின் உயிருக்கே உத்தரவாதம் இல்லாமல், இரவு பகல் பாராது கொரோனா நோயாளி களுக்காக பணியாற்றி வரும் நிலையில், இந்த ஜோடியின் ஜொள்ளு தங்களுக்கு பெரும் வருத்தத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தி இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்து உள்ளனர்.

இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.