சென்னையை சேர்ந்த தொழிலதிபரின் மகள், இங்கிலாந்தின் தலைநகரான லண்டனில் உயர்படிப்பு படித்து வருகிறார். இவர் கடந்த மேமாதம் 28ந்தேதி முதல் மாயமானதாக புகார் கூறப்பட்டது. இது பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், இங்கிலாந்தில் புகார் தொடர்பாக விசாரணை நடைபெற்று வந்தது. அதே வேளையில், அந்த மாணவியின் தந்தை, தனது மகள் திடீரென மாயமானதுதொடர்பாக சென்னை காவல்துறையிலும், மத்திய உள்துறை அமைச்சகத்திடமும் புகார் கூறினார்.
இதையடுத்து புகார் தொடர்பாக மத்திய உள்துறை என்ஐஏ விசாரணைக்கு உத்தரவிட்டது. இதில் பல்வேறு அதிர்ச்சி தகவல்கள் கிடைத்தன. அதன்படி, தொழிலதிபரின் மகளை லண்டனில் இருந்து கடத்தியது வங்கதேசத்தை சேர்ந்த மதபோதகார் நபீஸ் என்பது கண்டுபிடிக்கப்பட்டது.
விசாரணையில், அந்த நபர், படிக்கச் சென்ற மாணவியை காதலிப்பதாக (லவ்ஜிகாத்) நாடகமாடி, அவரை கடத்திச் சென்றது தெரிய வந்தது. இதன் விவகாரத்தில், அவருக்கு மதபோதகர் ஜாகிர் நாயக் உள்பட பலர் ஆலோசனை கூறியதாக கூறப்படுகிறது.
இதையடுத்து, ஆலோசனை வழங்கிய, நபீசின் தந்தை சா்தார் செகாவத் உசேன் பாகுல், மத போதகா் ஜாகிர் நாயக், யாசி குஷிதி, நகுமான் அலிகான் ஆகிய 5 போ் மீது சதித்திட்டம் வகுத்தல், குற்றச் செயல் புரிதல், ஆள் கடத்தல், பாலியல் தொல்லை கொடுத்தல், ஏமாற்றுதல், பணம் கேட்டு மிரட்டுதல், கொலை மிரட்டல் விடுத்தல் உள்பட 8 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டு விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
இது தொடா்பாக என்ஐஏ, லண்டன் காவல்துறை உதவியை நாடியுள்ளது.