லக்னோ: உ.பி.யில், லவ் ஜிகாத் பெயரில் கைது செய்யப்பட்ட இஸ்லாமிய இளைஞரை, குற்றச்சாட்டு நிரூபிக்க ப்படவில்லை என கூறி  விடுவிக்க நீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது.

உ.பி. மாநிலத்தில், மதமாற்றத்தை தடுக்கும் வகையில், சட்டம் இயற்றப்பட்டு உள்ளது. இதன்மூலம் லவ் ஜிகாத் என்று அழைக்கப்படும், மாற்று மதத்தினரை ஏமாற்றி திருமணம் செய்யும் நிகழ்வுகளை தடுக்க மாநில அரசு இந்த புதிய சட்டத்தை இயற்றி உள்ளது.  இந்த சட்டம் உ.பியில் அது முதலில் கொண்டு வரப்பட்டது. அதைத்தொடர்ந்து, தற்போது பாஜக ஆளும் மாநிலங்களில் கொண்டு வரப்பட்டு வருகிறது.

இந்தச் சட்டத்தின்படி, கட்டாயப்படுத்தி மதமாற்றம் செய்தல், நேர்மையற்ற முறையில் குறிப்பாகத் திருமணத்துக்காக மதம் மாறுதல் ஆகியவற்றில் ஈடுபடுவோருக்கு அதிக பட்சமாக 10 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்படும். மேலும், இவ்வாறு நடத்தப்படும் திருமணம் சட்டப்படி செல்லாது என்று அறிவிக்கப்படும். மேலும், திருமணத்துக்காக மதம் மாறுவதும் சட்டப்படி ஏற்கப்படாது. கட்டாய மதமாற்றத்தில் ஈடுபடுவோருக்கு ஓராண்டு முதல் ஐந்து ஆண்டுகள் வரை சிறைத் தண்டனையும், ரூ.15,000 அபராதமும் விதிக்கப்படும்.

சிறுமிகள், பட்டியலினத்தைச் சேர்ந்த பெண்களைக் கட்டாய மதமாற்றம் செய்பவர்களுக்கு 3 முதல் 10 ஆண்டுகள் வரை சிறையும், ரூ.25,000 அபராதமும் விதிக்கப்பட்டு, ஜாமீனில் வெளி வரமுடியாத குற்றமாகவும் கருதப்படும்.

இந்தச் சட்டத்தின் கீழ் உ.பியில் தொடர்ந்து வழக்குகள் பதிவு செய்யப்பட்டு வருகிறது. அதன்படி, மதம்மாறி  காதல் திருமணம் செய்துகொண்டவர்கள் குற்றவாளிகளாக்கப்பட்டு வருகின்றனர். `மதமாற்ற தடைச் சட்டம்’ என்ற பெயரில் இஸ்லாமிய இளைஞர்கள் உத்தரப்பிரதேசத்தில் வேட்டையாடப்படுவதாக ஒரு குற்றச்சாட்டும் எழுந்துள்ளது.

உ.பி.யில் மதமாற்ற தடை சட்டம் அமல்படுத்தப்பட்டு, ஓரு மாதத்திற்கு , 8 வழக்குகள் இதன் கீழ் பதிவு செய்யப்பட்டுள்ளன.  இதில் பல குளறுபடிகளும் நடைபெற்றுள்ளன.

இந்த நிலையில், சமீபத்தில்,  மொரதாபாத்தில் ஓர் இந்துப் பெண்ணை  இஸ்லாமிய இளைஞர் ஒருவர்  காதல் திருமணம் செய்துகொள்ள அது பெரும் பிரச்சினையை ஏற்படுத்தி உள்ளது.  அந்த இளைஞர், காவல்துறையினரால், கைது செய்யப்பட்டு அழைத்துச்செல்லப்பட்ட நிலையில், அவரது காதல் மனைவி  காப்பகத்துக்கு அனுப்பப்பட்டார். விசாரணை என்ற பெயரில் கர்ப்பமாக இருந்த  அந்த இளம்பெண்ணை காவல்துறையினர் அலைக்கழித்த நிலையில்,  அந்த இளம்பெண்ணின் கரு கலைந்த  சம்பவம்  பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

இதுகுறித்து  கைது செய்யப்பட் இஸ்லாமிய இளைஞரின் தாயார் கூறுகையில், “என் மகன் எந்தக் குற்றமும் செய்யவில்லை.  எனக்கு நான்கு மகள்களும், 3 மகன்களும் உள்ளனர். இதில் 2 மகன்களை போலீஸார் சிறையில் அடைத்து விட்டனர். வருமானத்துக்கு வழியில்லை. நாங்கள் பெரும் சிரமப்படுகிறோம்” என்றிருக்கிறார் கண்ணீருடன்.

இது தொடர்பான வழக்கில்,  ஏழு வாரங்கள் கர்ப்பமாக இருந்த தனக்கு காவல்துறையினரின் கஸ்டடியில் கருச்சிதைவு ஏற்பட்டது என்று கண்ணீருடன் அந்தஇளம்பெண் மாஜிஸ்ட்ரேட்டிடம், குறிப்பிட்டுள்ளார். மேலும், தன் சொந்த விருப்பத்தின் பேரிலேயே தன் கணவரை திருமணம் செய்துகொண்டதாகவும், தன்னை யாரும் கட்டாயப்படுத்தவில்லை என்றும் தெரிவித்தார்.

இதையடுத்து, அந்த இளம்பெண்ணை , அவரது அ மாமியார் வீட்டுக்கு அனுப்பப்பட்டட நிலையில், அவரது கணவர் சிறையில் அடைக்கப்பட்டார். தொடர் விசாரணையை அடுத்து,  கைது செய்யப்பட்ட இளைஞர் மீதான குற்றச்சாட்டு நிரூபிக்கப்படவில்லை என்று கூறி, அவரை விடுதலை செய்ய நீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது.

தனது கரு கலைந்தது குறித்து அந்தஇளம்பெண் செய்தியாளரிடம் கூறியதாவது, தன்னை அரசு காப்பகத்தில் அடைத்திருந்தபோது,  தனக்கு வயிறு வலிக்குது என்று சொன்னபோது, அங்கிருந்தவர்கள் யாரும், அதை கண்டுகொள்ளவில்லை. தொடர்ந்து உடல்நிலை பாதிக்கப்பட்ட பிறகே, மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அங்கு எனக்கு ஊசி போடப்பட்டது. அதையடுதது,   தனக்கு ரத்தக் கசிவு ஏற்பட்டு, கருச்சிதைவு ஏற்பட்டதாக கண்ணீர் மல்க தெரிவித்து உள்ளார்

`மதமாற்ற தடைச் சட்டம்’ என்ற பெயரில் இஸ்லாமிய இளைஞர்கள் உத்தரப்பிரதேசத்தில் வேட்டையாடப்படுவதாக ஒரு குற்றச்சாட்டும் எழுந்துள்ளது. “தச் சட்டத்தின்படி, கட்டாயப்படுத்தி மதமாற்றம் செய்தல், நேர்மையற்ற முறையில் குறிப்பாகத் திருமணத்துக்காக மதம் மாறுதல் ஆகியவற்றில் ஈடுபடுவோருக்கு அதிகபட்சமாக 10 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்படும்.