சிறுவனுடன் “காதல்” ஓட்டம்: இளம்பெண் போக்சோ சட்டத்தில் கைது

17 வயது சிறுவன் மீது ஈர்ப்பு கொண்டு, அவனை அழைத்துக்கொண்டு வீட்டைவிடுட்டு வெளியேறிய பெண் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளார்.

அயனாவரம் திக்காகுளத்தை சேர்ந்த பிரசாத் என்பவருக்கு 17 வயதில் மகன் இருக்கிறார். இவர் தனியார் மருத்துவமனையில் உதவியாளராக பணி புரிந்து வருகிறார்.

இந்த நிலையில்  மேடவாக்கம் லாக்மா நகரில் வசிக்கும் முருகன் என்பவரின் மனைவி சுவேதா (வயது 23) அந்த மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த தனது உறவினரை பார்க்க வந்து சென்று கொண்டிருந்தார்.

அப்போது அந்த சிறுவனுக்கும் சுவேதாவுக்கும் அறிமுகம் ஏற்பட்டது. நாளடைவில் இருவரும் நெருங்கிப்பழகினர்.

இது குறித்த அந்த இளைஞரின் பெற்றோருக்கு தெரியவரவே இருவரையும் கடுமையாக கண்டித்தனர். இந்த நிலையில் கடந்த வாரம் திடீரென அந்த சிறுவனை காணவில்லை. பல இடங்களிலும் தேடியும் கிடைக்காத நிலையில், சுவேதாவின் வீட்டிற்கு சென்று தேடினர். ஆனாலா சுவேதாவையும் காணவில்லை என்பது தெரியவந்தது.

இதையடுத்து சிறுவனின் யனாவரம் காவல்நிலையத்தில் ராஜாவின் தந்தை பிரசாத் புகார் அளித்தார்.  இதையடுத்து இருவரையும் தேடும் முயற்சியில் ஈடுபட்ட காவலர்கள், அவர்கள் இருவரையும் கண்டுபிடித்தனர்.

மைனர் சிறுவனை தகாத உறவுக்காக அழைத்துச் சென்றார் என்ற குற்றச்சாட்டின் கீழ்  சுவேதாமீது குழந்தைகள் வன்கொடுமை தடுப்புச் சட்டமான போக்சோ சட்டத்தின்படி  வழக்குப்பதிவு செய்த காவலர்கள் சுவேதாவை கைது செய்தனர்.

பொதுவாக மைனர் சிறுமிகளிடம் பாலியல் தொந்தரவு மற்றும் வன்முறையில் ஈடுபடு (மேஜர்) ஆண்கள் மீதுதான் போக்ஸோ சட்டம் பாயும். ஆனால் ஆனால் சென்னையில் இரண்டாவது முறையாக பெண் ஒருவர் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டிருக்கிறார். சமீபத்தில் தேனாம்பேட்டையில் பெற்ற மகளுக்கே பாலியல் தொல்லை கொடுத்த தாய்மீது போக்சோ சட்டம் பாய்ந்தது நினைவிருக்கும்.

#Love #boy #runaway  #lady #left #home #arrested #Pokso #law #chennai