சென்னை,

ந்தமான் அருகே புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகி இருப்பதால், தமிழகத்தில் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை  சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியதாவது:

தெற்கு அந்தமான் கடல் பகுதி மற்றும் தென்கிழக்கு வங்கக் கடலை ஒட்டியுள்ள பகுதியில் நிலவி வந்த காற்றழுத்த தாழ்வுநிலை காரணமாக, அதே பகுதியில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளது.

அதன் காரணமாக வரும் 8-ம் தேதி கடலோர தமிழகத்தில் லேசான மழை பெய்யும் என்றும்,  9-ம் தேதி தமிழகம், புதுவையில் ஒருசில இடங்களில் இடியுடன் கூடிய மழை பெய்யும் என்று கூறியுள்ளது.

மேலும்,  இன்று முதல் 10-ம் தேதி வரை வடகிழக்கு மற்றும் கிழக்கு திசையில் இருந்து தமிழகம் மற்றும் புதுச்சேரி கடலோரப் பகுதி நோக்கி பலத்த காற்று வீசும்.

இந்த காற்றின் வேகம் மணிக்கு சுமார் 65 கிமீ வரை இருக்கும். அதனால் அந்தக் காலகட்டத்தில் மீனவர்கள் கடலுக்குள் செல்லும்போது கவனமாக இருக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

இவ்வாறு சென்னை வானிலை மையம் தெரிவித்து உள்ளது.