டில்லியில் இன்று அதிகாலை இலேசான நிலநடுக்கம்

டில்லியில் இன்று அதிகாலை இலேசான நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கத்தால், எந்த ஒரு சேதமும் ஏற்படவில்லை.

 

தலைநகர் டில்லியில் இன்று அதிகாலை இலேசான நிலநடுக்கம் ஏற்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதிகாலை 3.47 மணியளவில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 2.8 ஆக பதிவானதாக  நிலநடுக்கம் பற்றிய அறிவியல் ஆய்வு  மையம் தெரிவித்துள்ளது. நிலநடுக்கத்தால், எந்த ஒரு உயிர்சேதமோ, பொருட்சேதமோ ஏற்படவில்லை என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.