டில்லி

டந்த 30 வருடங்களில் இல்லாத அளவுக்கு இந்தியப் பொருளாதாரம் 2% ஆகக் குறைய வாய்ப்பு  உள்ளதாகக் கணிப்புக்கள் தெரிவிக்கின்றன.

ஒவ்வொரு நாட்டின் பொருளாதார வளர்ச்சியும் ஜிடிபி என்னும் உள்நாட்டு உற்பத்தியைக் கொண்டு கணக்கிடப்படுகிறது.  சுருக்கமாகச் சொன்னால் ஜிடிபி சதவிகிதம் என்பதே அந்நாட்டின் பொருளாதார வளர்ச்சி சதவிகிதம் ஆகும்   அவ்வகையில் இந்தியாவின் ஜிடிபி கடந்த சில வருடங்களாகவே எதிர்பார்ப்பை விட குறைந்து வருகிறது.

கடந்த 2013-14 ஆம் ஆண்டு 6.4% ஆக இருந்த ஜிடிபி சென்ற நிதியாண்டான 2018-19 ஆம் ஆண்டு 5.8% ஆகக் குறைந்தது.   இந்த நிதியாண்டான  2019-20 ஆம் ஆண்டில் ஜிடிபி 6.9 சதவிகிதமாக இருக்கும் என முதலில் கணக்கிடப்பட்டது.  அதன்பிறகு அது 5.1 % ஆகக் குறையும் என ஃபிட்ச் கணக்கெடுப்பு அறிவித்து இருந்தது.

இன்று வெளியான கணிப்பின் படி இந்திய பொருளாதார வளர்ச்சி அதாவது ஜிடிபி எதிர்பார்க்கப்பட்ட 5.1% க்கு பதில் 2% மட்டுமே இருக்கலாமென கூறப்படுகிறது.  இது கடந்த 30 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு மிகவும் குறைவானதாகும்.

உலகம் முழுவதும் கொரோனாவால் ஏற்பட்டுள்ள பொருளாதார வீழ்ச்சியின் விளைவால் இந்த நிலை உண்டாகி உள்ளதாக கூறப்பட்டுள்ளது.  இந்த க்ணிபின்படி உலக பொருளாதார வளர்ச்சி -1.9% லிருந்து -1.3 ஆகக் குறையும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.