கேஸ் சிலிண்டர் பெற அமலுக்கு வந்த புதிய நடைமுறை: வாடிக்கையாளர்கள் தெரிந்து கொள்ள வேண்டிய முக்கிய விவரங்கள்

டெல்லி: சமையல் எரிவாயு சிலிண்டர்களை புக் செய்யும் ஓடிபி முறை அமலுக்கு வந்துள்ளது.

வீடுகளில் உபயோகிக்கப்படும் கேஸ் சிலிண்டர்களை புக் செய்வதக்று பல வசதிகள் இருக்கின்றன. ஆனாலும், நேற்று முதல் சிலிண்டர் வினியோகத்தில் புதிய விதிமுறைகளை மத்திய அரசு அறிவித்திருந்தது. அந்த நடைமுறைகளும் அமலுக்கு வந்துள்ள நிலையில் அதன் முழு விவரங்களை இங்கே காணலாம்.

சமையல் எரிவாயு சிலிண்டர் வீடுகளுக்கு வரும் போது வாடிக்கையாளருக்கு ஓடிபி எண் அனுப்பப்படும். சிலிண்டர் வினியோகம் செய்ய வீடுகளுக்கு வரும் ஊழியர்களிடம் அந்த எண்ணை காண்பிக்க வேண்டும்.

இது குறித்து வாடிக்கையாளர்களுக்கு டிஏசி எனப்படும் பாதுகாப்பு கோட் எண்ணை வழங்கப்படும். பின்னர் பதிவு செய்யப்பட்ட செல்போன் எண்ணுக்கு வரும் ஒடிபியை டெலிவரி நபரிடம் காண்பித்தால் போதும்.

இண்டேன் நிறுவன வாடிக்கையாளர்களின் வசதிக்காக 7718955555 என்ற 24 மணி நேரம் சேவை எண்ணை அறிமுகப்படுத்தி உள்ளது. செல்போன் எண்ணை பதிவு செய்ய தவறியவர்கள் உடனடியாக பதிவு செய்து கொள்ள வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.