எரிவாயு சிலிண்டர் விலை உயர்வு : மக்கள் தவிப்பு

டில்லி

மானியம் இல்லாத எரிவாயு சிலிண்டர்களின் விலை ரூ.48 ம் மானியம் உள்ள சிலிண்டர்களின் விலை ரூ.2.34 ம் உயர்ந்துள்ளது.

கர்நாடகா தேர்தலை முன்னிட்டு பெட்ரோல் மற்றும் டீசல் விலை மாறுதல் இல்லாமல் இருந்தது.    தேர்தல் முடிந்ததும் தினமும் விலை உயர்ந்து தற்போது வரலாறு காணாத விலையில் பெட்ரோல் மற்றும் டீசல் விற்கப்படுகிறது.

நேற்று 9 சட்டப்பேரவை மற்றும் 4 மக்களவை இடைத்தேர்தல்கள் முடிந்து முடிவுகள் அறிவிக்கப்பட்டன.

இன்று எரிவாயு சிலிண்டர்கள் விலை ஏற்றப்பட்டுள்ளன.

மானிய சிலிண்டர்கள் விலையில் ரூ.,2.34 ம்  மானியமில்லா சிலிண்டர்கள் விலையில் ரூ48 ம் அதிகரித்துள்ளது.

அதன்படி மானிய சிலிண்டர் விலை டில்லியில் ரூ.493.55,  கொல்கத்தாவில் ரூ.496.65,  மும்பையில் ரூ.491.31, மற்றும் சென்னையில் ரூ.484.84 என உயர்ந்துள்ளது.

மானியமில்லா சிலிண்டர் விலை டில்லியில் ரூ.698.50, கொல்கத்தாவில் ரூ.723.50. மும்பையில் ரூ.671.50, சென்னையில் ரூ.712.50 என அதிகரித்துள்ளது.

ஏற்கனவே பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்வால் துயருறும் மக்களுக்கு இந்த எரிவாயு சிலிண்டர் விலை உயர்வால் மேலும் தவிப்பு அதிகரித்துள்ளதாக ஆர்வலர்கள் கூறுகின்றனர்.