சமையல் எரிவாயு விலை உயர்வு : மத்திய அரசுக்கு மக்கள் கண்டனம்

டில்லி

மானியம் உள்ள சமையல் எரிவாயு சிலிண்டர் விலை ரூ.4.60 உயர்த்தப்பட்டதுக்கு பொதுமக்கள் கடும் தண்டன்ம் தெரிவித்துள்ளனர்.

பெட்ரோல், டீசல் விலைகளை தினமும் மாற்றி அமைத்துக் கொள்ள எண்ணெய் நிறுவனங்களுக்கு அனுமதி அளித்த பின் பெட்ரோல், டீசல் விலை அதிகரித்து வருவதாக பலரும் குற்றம் சாட்டி வருகின்றனர்.   நேற்று முதல் சமையல் எரிவாயு சிலிண்டர்களின் விலையும் ஏறி மக்களை பெரிதும் வாட்டி வருகிறது.

மானியம் உள்ள சமையல் எரிவாயு, 14.2கிலோ எடையுள்ள ஒரு சிலிண்டர், சென்ற மாதம் டில்லியில் ரூ.491.13, கொல்கத்தாவில் ரூ.493.83, மும்பையில் ரூ, 493.80 மற்றும் சென்னையில் ரு.479.11 என விலை நிர்ணயிக்கப்பட்டிருந்தது  நேற்று முதல் சிலிண்டர் ஒன்றுக்கு விலை ரூ.4.60 உயர்த்த்தப்பட்டுள்ளது.   தற்போதைய விலை டில்லியில் ரூ. 495.69, கொல்கத்தாவில் ரூ.498.43,  மும்பையில் ரூ.498.38, சென்னையில் ரூ.483.69 என ஆகி உள்ளது.

இந்தியாவில் மொத்தம் 18.11 கோடி வாடிக்கையாளர்களுக்கு மானியம் உள்ள சமையல் எரிவாயு வழங்கப் படுகிறது.   இதில் வறுமைக் கோட்டுக்கு கீழே உள்ள 2.5 கோடி பெண்களுக்கு அளிக்கப்பட்ட இலவச இணைப்புகளு, அடங்கும்.  மேலும் சுமார் 3 கோடி பேருக்கு இலவச இணைப்பு வழங்க அரசு உத்தேசித்துள்ளது.

மாதா மாதம் சிலிண்டருக்கு ரூ. 4 உயர்த்திக் கொள்ள அரசு அனுமதித்ததால் தான் இந்த விலை உயர்வு என்பதால் மக்கள் அரசுக்கு தங்களின் கண்டனத்தை தெரிவித்து வருகின்றனர்.

You may have missed