கொரோனா அச்சுறுத்தல்: வரலாற்றில் முதன்முறையாக முகக்கவசம், சமூக இடைவெளி, பிளாஸ்டிக் தடுப்புகளுடன் நடைபெற்ற மக்களவை கூட்டம்…

டெல்லி:  கொரோனா அசசுறுத்தலுக்கு மத்தியில் சிலமாத இடைவெளிக்கு பிறகு, வரலாற்றில் முதல் முறையாக முகக்கவசம், சமூக இடைவெளி, பிளாஸ்டிக் தடுப்பு உள்பட கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளுடன் மக்களவை கூட்டம் நடைபெற்றது.

நாடு, கொரோனா அச்சுறுத்தல், எல்லையில் சீன படைகளின் அத்துமீறல் மற்றும் பொருளாதார பிரச்சினை உள்பட பல்வேறு  சமூக பேரவலங்களுக்கு இடையில், பாராளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் இன்று தொடங்கியது.

முன்னதாக, கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளின்படி, ஆர்.டி.-பி.சி.ஆர் பரிசோதனை நடத்தப் பட்ட பின்னரே எம்.பி.க்கள் கூட்டத்தில் பங்கேற்க அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதேபோல் பாராளு மன்ற ஊழியர்கள் மற்றும் செய்தி சேகரிக்கும் பத்திரிகையாளர்களும் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. எம்.பி.க்கள் மொபைல் செயலி மூலம் தங்கள் வருகையை பதிவு செய்ய ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

மக்களவை மண்டபத்தில் 257 உறுப்பினர்களும், பார்வையாளர்கள் மாடத்தில் 172 உறுப்பினர்களும் அமர வைக்கப்பட்டுள்ளனர்.  இதேபோல் மாநிலங்களவை மண்டபத்தில் 60 உறுப்பினர்களும், பார்வையாளர்கள் மாடத்தில் 51 உறுப்பினர்களும் அமர வைக்கப்பட்டுள்ளனர். இவர்கள் கேமரா மூலம் சபாநாயகரிடம் பேசும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தத.

அதுபோல, முதன்முறையாக, மக்களவையும், மாநிலங்களையும் இரு வெவ்வேறு ஷிப்ட்களில் நடக்கிறது. கூட்டம் நடத்துவதற்காக இருசபைகளும் ஒருங்கிணைக்கப்பட்டு உள்ளன.

கொரோனா கால கட்டுப்பாடுகளை பின்பற்றி  சமூக இடைவெளியுடன் இருக்கைகள் மாற்றி அமைக்கப்பட்டுள்ளன. வழக்கமாக ஆறு உறுப்பினர்களைக் கொண்ட பெஞ்சுகள் மூன்று பேருக்கு மட்டுமே அமர்ந்திருக்கும்  வகையில் மாற்றப்ப்டடிருந்தது.  ஒவ்வொரு இருக்கைக்கும் இடையே சமூக இடைவெளி யுடன், ஒருவருக்கும் அடுத்தவருக்கும் இடையே பிளாஸ்டிக்கிலான தடுப்பு அமைக்கப்பட்டிருந்தது.

சபாநாயகர் மேடையின் வலதுபுறத்தில் உள்ள கருவூல பெஞ்சுகளின் முன் இருக்கைகள் பிரதமர் நரேந்திர மோடி முதலிடத்தில் குறிக்கப்பட்ட இருக்கையில் அமர்ந்திருந்தார். பாதுகாப்பு மந்திரி ராஜ்நாத் சிங் 2 வது இடத்திலும், விவசாய அமைச்சர் நரேந்திர சிங் தோமர் 3 வது இடத்திலும் அமர்ந்திருந்தனர்.

எதிர்க்கட்சி பெஞ்சுகளின் முன் இருக்கைகளை திமுகவின் டி ஆர் பாலு மற்றும் காங்கிரசின் ஆதீர் ரஞ்சன் சவுத்ரி ஆகியோர் ஆக்கிரமித்துள்ளனர்.

தேசிய மாநாட்டுத் தலைவர் ஃபாரூக் அப்துல்லாவும் கலந்து கொண்டு இரண்டாவது வரிசையில் எதிர்க்கட்சி பெஞ்சுகளில் அமர்ந்திருந்தார்.

பிரதமர் சபைக்குள் நுழைந்தவுடனேயே கைதட்டல்களும் “பாரத் மாதா கி ஜெய்” கோஷமும் எழுப்பி பாஜகவினர் வரவேற்றனர்.  எதிர்க்கட்சியைச் சேர்ந்தவர்கள் உட்பட உறுப்பினர்களை  மேஜையை கைகளால் தட்டி வரவேற்றனர். அனைவருக்கும் பிரதமர் மோடி வணக்கம் தெரிவித்தார்.

உறுப்பினர்கள் அனைவரும் முகமூடி அணிந்திருந்தனர். திரிணாமுல் காங்கிரஸ் தலைவர் கல்யாண் பானர்ஜி உட்பட சிலர் முக கவசங்களை அணிந்திருந்தனர்.

இவ்வளவு பாதுகாப்பு முன்னேற்பாடுகளுடன் இன்று சபை சபாநாயகர் ஓம்பிர்லா தலைமையில் தொடங்கியது.  காலை 9 மணிக்கு  மக்களவை கூடியது. முதல் சபை நடவடிக்கையாக மறைந்த முன்னாள் உறுப்பினர்களுக்கு இரங்கல் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

முன்னாள் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி  அண்மையில் இறந்த 13 முன்னாள் உறுப்பினர்களுக்கு அஞ்சலி செலுத்தி செலுததப்பட்டது. சுமார் 20 நிமிடங்கள் இந்த நிகழ்வுகள் நடைபெற்றன. அதைத் தொடர்ந்து, சுமார்  ஒரு மணி நேரம் அவை  ஒத்திவைக்கப்பட்டது.

பின்னர் அவை மீண்டும் தொடங்கி நடைபெற்றது.

மக்களவை அறையில் கிட்டத்தட்ட 200 உறுப்பினர்கள் இருந்தபோது, ​​பிரதான அறைக்கு மேலே அமைந்துள்ள பார்வையாளர்களின் கேலரியில் 30 க்கும் மேற்பட்டோர் அமர்ந்திருந்தனர்.

மக்களவை அறையில் ஒரு மாபெரும் தொலைக்காட்சித் திரை, மிகக் குறைவான மக்களவை உறுப்பினர்கள் ராஜ்யசபா அறையில் இடங்களை வைத்திருப்பதைக் காட்டியது.

முதல் நாளான இன்று மக்களவை கூட்டம் காலை 9 மணி முதல் பிற்பகல் 1 மணி வரையும், நாளை (செவ்வாய்க்கிழமை) முதல் அக்டோபர் 1-ந் தேதி வரை பிற்பகல் 3 மணி முதல் இரவு 7 மணி வரையிலும் நடைபெறும்.

மாநிலங்களவை கூட்டம் முதல் நாளான இன்று பிற்பகல் 3 மணி முதல் இரவு 7 மணி வரையிலும், மற்ற நாட்களில் காலை 9 மணி முதல் மதியம் 1 மணி வரையிலும் நடைபெறுகிறது.