புதுடெல்லி:

தேர்தலுக்குப் பிந்தைய பெரும்பாலான கருத்துக் கணிப்புகளில் தவறாகியிருப்பதாக துணை குடியரசுத் தலைவர் வெங்கய்ய நாயுடு தெரிவித்துள்ளார்.


ஆந்திர மாநிலம் குண்டூரில் நலன் விரும்பிகள் ஏற்பாடு செய்திருந்த கூட்டத்தில் துணை குடியரசுத் தலைவர் வெங்கய்ய நாயுடு பங்கேற்றார்.

அப்போது பேசிய அவர், நடைபெற்ற தேர்தலில் வெற்றி பெறுவோம் என்பதில் அனைத்துக் கட்சிகளுக்கும் அதீத நம்பிக்கை இருக்கும். வாக்கு எண்ணிக்கை தொடங்கும் வரை ஒவ்வொருவரும் தங்கள் நம்பிக்கையை வெளிப்படுத்தலாம்.

திறமையான மற்றும் நிலையான தலைவர்தான் நாட்டுக்குத் தேவை. அரசியல் கட்சிகள் எதிரிகளாக நினைக்கக் கூடாது.

தேர்தலில் வெற்றி பெற அரசியல் கட்சிகள் இலவசங்களை அறிவிப்பது தவறு.

தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள் எப்போதுமே துல்லியமாக இருப்பதில்லை. அது சரியான கணிப்பும் அல்ல.கடந்த 1999 முதல் பெரும்பாலான தேர்தல் கருத்துக் கணிப்புகள் தவறாகியிருக்கின்றன என்றார்.