எட்டு நாட்களில் 100 கோடி ரூபாய் வசூலை அள்ளி தந்துள்ள ‘லூசிஃபர்’

அரசியல் பின்னணியைக் கொண்ட ஆக்‌ஷன் படமாக மோகன்லால் நடிப்பில் வெளியான ‘லூசிஃபர்’ திரைப்படம் 8 நாட்களில் ரூ. 100 கோடியை வசூலித்து சாதனை படைத்துள்ளது.

இதில் மஞ்சு வாரியர், டொவினோ தாமஸ், விவேக் ஓபராய் உள்ளிட்ட நடிகர்களும் நடித்திருந்தனர்.

இந்தப் படம் வெளியான எட்டு நாட்களில் 100 கோடி ரூபாய் வசூலை எட்டி, குறைந்த நாட்களில் இந்த வசூலை எட்டிய திரைப்படம் என்ற சாதனையைப் படைத்துள்ளது.

நடிகர் மோகன்லால் இதுபற்றி ட்விட்டரில் “வெறும் 8 நாட்களில் லூசிஃபர் 100 கோடி பட்டியலில் இணைந்துவிட்டது.உண்மையில் நெகிழ்ச்சியைத் தருகிறது. உங்களது ஆதரவின் பலனாக, மலையாள திரைத்துறையின் பல்வேறு புதிய இடங்களுக்கு சென்றடைந்துள்ளது. பிரித்விராஜ் மற்றும் லூசிஃபர் குழுவினருக்கு வாழ்த்துகள்” என்று பதிவிட்டு பாராட்டியுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published.