மலையாளத்தில் ப்ரித்விராஜ் இயக்கத்தில் மோகன்லால் நடிப்பில் வெளியாகி மாபெரும் வரவேற்பைப் பெற்ற படம் ‘லூசிஃபர்’.

இந்தப் படம் தமிழில் டப்பிங் செய்யப்பட்டது. தெலுங்கில் இதன் ரீமேக் உரிமையைக் கைப்பற்றினார் ராம்சரண்.

மோகன்லால் கதாபாத்திரத்தில் சிரஞ்சீவி நடிப்பது உறுதியானது . இந்த ரீமேக்கை முதலில் ‘சாஹோ’ இயக்குநரான சுஜீத் இயக்குவார் என்று தகவல் வெளியானது. ஆனால் தற்போது ‘லூசிஃபர்’ தெலுங்கு ரீமேக்கை வி.வி.விநாயக் இயக்கவுள்ளதை சிரஞ்சீவி உறுதிப்படுத்தியுள்ளார்.

‘லூசிஃபர்’ தெலுங்கு ரீமேக்கை ராம்சரண் மற்றும் என்.வி.பிரசாத் இணைந்து தயாரிக்கவுள்ளனர்.