மலையாளத்தில் ப்ரித்விராஜ் இயக்கத்தில் மோகன்லால் நடிப்பில் வெளியாகி மாபெரும் வரவேற்பைப் பெற்ற படம் ‘லூசிஃபர்’.

இந்தப் படத்தின் தெலுங்கு ரீமேக் பணிகள் தொடங்கப்பட்டுள்ளது.

ராம்சரண், சூப்பர் குட் பிலிம்ஸ் மற்றும் என்.வி.ஆர் பிலிம்ஸ் இணைந்து தயாரிக்கவுள்ளனர். மோகன் ராஜா இயக்கத்தில் உருவாகும் ‘லூசிஃபர்’ ரீமேக்கில் சிரஞ்சீவி நாயகனாக நடிக்கவுள்ளார்.

இந்தப் படத்தின் ஒளிப்பதிவாளராக நீரவ் ஷா, இசையமைப்பாளராக தமன், கலை இயக்குநராக சுரேஷ் செல்வராஜன் ஆகியோர் பணிபுரியவுள்ளனர்.

இந்நிலையில் ஹைதராபாத்தில் இந்தப் படத்தின் பூஜை நடைபெற்றது.