கொரோனா அச்சுறுத்தல்: இந்தியா-தென்னாப்பிரிக்கா இடையே மீதமுள்ள 2 போட்டிகளும் ரத்து

லக்னோ:

கொரோனா அச்சுறுத்தல் காரணமாக இந்தியா-தென்னாப்பிரிக்கா இடைபெற்று வரும் தொடரின் முதல் ஆட்டம் மழையால்  கைவிடப்பட்ட நிலையில், மீதமுள்ள 2 போட்டிகளும் ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டு உள்ளது.


இந்தியா மற்றும் தென்னாப்பிரிக்காவுக்கு இடையேயான 3 ஒருநாள் தொடர் ஆட்டம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. ஏற்கனவே முதல் ஒருநாள் போட்டி  மழை காரணமாகக் கைவிடப்பட்டது. இதைத்தொடர்ந்து மற்ற போட்டிகளிலும் ஆடும் வகையில், இரு அணிகளும் வெள்ளிக்கிழமை லக்னோவுக்குச் சென்றுள்ளது.

இந்த நிலையில், கொரோனா பீதி காரணமாக, லக்னோ மற்றும், கொல்கத்தா போட்டிகள் ரத்து செய்யப்படவதாக பிசிசிஐ அறிவித்து உள்ளது.

முன்னதாக போட்டிகள் ரசிகர்கள் இல்லாமல் நடத்தப்படத் திட்டமிட்டிருந்த நிலையில், அரசு வெளியிட்ட உத்தரவுக்குப் பின் போட்டிகள் கைவிடப்பட்டுள்ளது. அதுபோல  ஐபிஎல் போட்டிகளும் மார்ச் 29ம் தேதியிலிருந்து ஏப்ரல் 15ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது  குறிப்பிடத்தக்கது.