கர்ப்பிணி பெண்களுக்கென்று லக்னோ பல்கலையின் புதிய படிப்பு!

லக்னோ: மகப்பேறு காலத்தில் உள்ள பெண்களுக்கென்று தனியான ஒரு சிறப்பு பாடத்திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது உத்திரப்பிரதேசத்தின் லக்னோ பல்கலைக்கழகம்.

அந்தப் புதிய பாடத்திட்டத்தின் பெயர் ‘கர்ப் சன்ஸ்கர்’. கர்ப்பிணி பெண்களுக்கு உதவிடும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ள இந்தப் பாடத்திட்டத்தின் கீழ், கர்ப்ப காலத்தில் என்ன உடை அணிய வேண்டும், என்ன சாப்பிடுவது, எப்படி நடந்து கொள்வது, என்ன மாதிரியான இசை நல்லது உள்ளிட்ட தாய்மைப் பற்றிய பாடங்கள் கற்பிக்கப்படவுள்ளது.

மேலும், இந்தப் பாடத்தை, மாணவிகள் மட்டுமின்றி, மாணவர்களும் தேர்வுசெய்து படிக்கலாம் என்று பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

பல்கலைக்கழக செய்தி தொடர்பாளர் துர்கேஷ் ஸ்ரீவாஸ்தவா, “மாநில கவர்னரான ஆனந்திபென் படேல், தாய்மார்களாகும் பெண்களுக்கு பயிற்சி அளிப்பது தொடர்பாக நிர்வாகத்திடம் கேட்டுக்கொண்டதால் இந்தப் புதிய பாடத்திட்டம் ஏற்படுத்தப்பட்டுள்ளது.

பல்கலைக்கழகத்தின் இந்த நடவடிக்கையை மாணாக்கர்கள் மற்றும் மகப்பேறு மருத்துவர்கள் வரவேற்றுள்ளனர் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.