கால்பந்து ஜம்பவான்களை வீழ்த்தி பிபா விருதை வென்றார் குரோஷியாவின் லூகா மாட்ரிக்

இந்த ஆண்டிற்கான பிபா விருதை மெஸ்ஸி மற்றும் ரொனால்டோவை பின்னுக்கு தள்ளி குரோஷியாவின் லூகா மாட்ரிக் வென்றார். கால்பந்து உலகில் கிட்டத்தட்ட 10 ஆண்டுகளாக ஆதிக்கம் செலுத்திய ரொனால்டோ மற்றும் மெஸ்ஸிக்கு லூகா மாட்ரிக் முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.

ballon

சர்வதேச அளவில் கால்பந்து விளையாட்டில் சிறப்பாக செயல்பட்ட வீரர்களுக்கு சர்வதேச கால்பந்து கூட்டமைப்பான பிபா ஆண்டுதோறும் பலூன் டி’ஆர் (சிறந்த கால்பந்து வீரர்) விருது வழங்கி வருகிறது. இந்த விருதை அர்ஜெண்டினாவின் லியோனல் மெஸ்ஸி, போர்ச்சுக்கல் வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோ அதிகபட்சமாக தலா 5 முறை பெற்றுள்ளனர்.

கடந்த 2008ம் ஆண்டு முதல் 10 ஆண்டுகளாக இவர்கள் இருவருமே சிறந்த வீரருக்கான விருதை பெற்று வந்தனர். இந்நிலையில் இந்த ஜாம்பவான்களை பின்னுக்கு தள்ளி இந்த ஆண்டிற்கான பிபா விருதினை குரோஷியாவின் லூகா மாட்ரிக் பெற்றுள்ளர்.

luka

இந்த ஆண்டிற்கான பிபா விருது வழங்கும் நிகழ்ச்சி பாரீஸில் நடைபெற்றது. இதில் லூகா மாட்ரிக் பிபா விருதினை பெற்றார். இதன் மூலம் சிறாந்த வீரருக்கான பிபா விருதை பெறும் முதல் குரோஷிய வீரர் என்ற சாதனையையும் லூகா மாட்ரிக் படைந்த்துள்ளர். அதுமட்டுமின்றி இந்த விருதை பெறும் 10வது நபராகவும் லூகா மாட்ரிக் உள்ளார்.

பிபா விருதி வழங்கும் பட்டியலில் கிறிஸ்டியானோ ரொனால்டோ 2வது இடத்தையும், லியோனல் மெஸ்ஸி 6வது இடத்தையும் பெற்றனர். இதேபோல் கால்பந்து போட்டியில் சிறந்த வீராங்கனைக்கான விருதினை நார்வே நாட்டின் ஆடா ஹெக்கர்பர்க் வென்றார். இதுதவிர 21வயதுக்குட்பட்ட சிறந்த வீரருக்கான கோபா டிராபி விருதை பிரான்ஸை சேர்ந்த கிளையன் மாப்பே தட்டிச்சென்றார்.

முதல் முறையாக கோபா டிராபி வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.