சென்னை:
யோத்தியில் ராமர் கோவில் கட்டுவதற்கான பூமி பூஜை விழாவை நாட்டின் பல பகுதிகளில் ஆர்வத்துடன் கொண்டாடினர், ஆனால் தமிழகத்தில் பாஜக மற்றும் ஒரு சில இந்து அமைப்புகளால் ஏற்பாடு செய்யப்பட்ட சில செயல்பாடுகளை தவிர பூமி பூஜைக்கு ஆதரவாக குறிப்பிடத்தக்க பொது நிகழ்வுகள் ஏதுவும் நடக்கவில்லை.
திமுக, பாமக, மதிமுக, விசிக, தேமுதிக உள்ளிட்ட தமுழகத்தின் எந்த பெரிய அரசியல் கட்சியும் இந்நிகழ்வுக்கு ஆதரவு தெரிவிக்கவில்லை. இந்நிகழ்ச்சியை வெற்றிகரமாக நடத்தி முடித்ததற்காக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி, பிரதமர் நரேந்திர மோடிக்கு முறையான வாழ்த்து தெரிவித்த போதிலும், அதிமுக சார்பாக எந்த பொதுவான அறிக்கையும் வெளியிடவில்லை.
அதன் பிறகு துணை முதல்வர் ஓ பன்னீர்செல்வம் தனிப்பட்ட முறையில்தான் பிரதமருக்கு வாழ்த்து தெரிவித்திருந்தார். பாஜகவுக்கு ஆதரவு தெரிவிக்கும் அதிமுக இதைபற்றி பொதுவான கருத்து வெளியிடாமல் இருப்பது வியப்பாகவே உள்ளது. மேலும் மாநில காங்கிரஸ் கட்சியும் இதைப் பற்றி எதுவும் தெரிவிக்கவில்லை, ஆனால் ராகுல் காந்தி மட்டும் தனது ட்விட்டர் பக்கத்தில் ராமரைப் பற்றி பொதுவாக பேசி பதிவிட்டிருந்தார்.
தமிழ்நாட்டின் சார்பில் இந்த நிகழ்வை யாரும் அதிகாரப்பூர்வமாக ஆதரிக்கவில்லை என்றாலும். இந்த நிகழ்விற்க்கு இடதுசாரி கட்சிகளைத் தவிர வேறு யாரும் பாஜகவை விமர்சிக்கவும் வில்லை. விசிக கட்சி சார்பில் தொல் திருமாவளவன் மட்டும் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் இந்த நிகழ்ச்சியில் கலந்துகொள்ளவில்லை என்று விமர்சித்திருந்தார்.
தமிழ்நாட்டில் 85 சதவீதம் இந்துக்கள் இருந்தபோதிலும், வரலாற்று சிறப்புமிக்க ராமர் கோவில் கட்டுவதை யாரும் பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை என்பது கடினமாகவே உள்ளது.
தமிழக துணை முதல்வர் ஓ பன்னீர்செல்வம் மட்டும் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெ ஜெயலலிதாவும் ராமர் கோவில் கட்டுவதற்கு ஆதரவு தெரிவித்ததாக தனது ட்விட்டர் பக்கத்தில் குறிப்பிட்டிருந்தார், இருப்பினும் மசூதிக்கு இடையூறு விளைவிக்காமல் அதனை செய்யவேண்டுமென்று அவர் எதிர்பார்ப்பதாகவும் தன் பதிவில் பன்னீர்செல்வம் சுட்டிக்காட்டியுள்ளார். பின்பு அவர் இவ்வாறு தெரிவித்ததை தொடர்ந்து மசூதி இடிக்கப்பட்ட பிறகு ஜெயலலிதா இந்த செயலை கடுமையாக கண்டித்து இருந்தார் என்றும் அவர் பதிவிட்டுள்ளார்.
தமிழகத்தின் அரசியல் கூற்றுப்படி ராமரை மிகக் குறைந்த இந்துக்கள் மட்டுமே வணங்குகின்றனர். இந்துக்களில் பெரும்பாலானோர் சிவன், விநாயகர், முருகர், அம்மன், பெருமாள் என்று மற்ற கடவுள்களை  பின்பற்றுகிறார்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனால் தான் வரலாற்று சிறப்பு மிக்க ராமர் கோவில் கட்டுவதற்கு தமிழகத்தில் அதிக வரவேற்ப்பு இல்லை என்று தெரிவிக்கப்பட்டாலும், இதன் மூலம் கேரளா மற்றும் தமிழகத்தில் முஸ்லிம், கிறிஸ்தவர்கள் மற்றும் ஹிந்துக்களிடையே நல்ல ஒற்றுமை உள்ளதாக தெரியவருகிறது.