சந்திர கிரகணம்: 11 மணி நேரம் மூடப்பட்ட திருப்பதிகோவில் மீண்டும் திறப்பு..!

திருப்பதி:

ந்திரகிரகணம் காரணமாக கடந்த 11 மணி நேரமாக மூடப்பட்டிருந்த திருப்பதி வெட்கடாஜலபதி கோவில் மீண்டும் இன்று அதிகாலை திறக்கப்பட்டது.

இந்த நூற்றாண்டின் மிகப்நீளமான சந்திர கிரகணம் நேற்று இரவு 11.54 மணி முதல் இன்று அதிகாலை 3.49 மணி வரை ஏற்பட்டது. சந்திரகிரகணம் காரணமாக நாடு முழுவதும் உள்ள அனைத்து கோவில்களும் முன்கூட்டியே மூடப்பட்டது.

அதுபோல திருப்பதி கோவிலும் நேற்று பிற்பகல் முதல் மூடப்பட்டது. சந்திரகிரகணத்தை முன்னிட்டு நேற்று மாலை 5 மணி அளவில் அர்ச்சகர்கள் கருவறை முதல் கோயிலுக்குள் உள்ள சன்னதி கதவுகள் அடைக்கப்பட்டு பூட்டுப் போடப்பட்டது. தொடர்ந்து 11 மணி நேரம் கோவில் மூடப்பட்டதால், தரிசனத்துக்கு வந்த பக்தர்கள் கடும் அவதிப்பட்டனர்.

இந்த நிலையில், இன்று அதிகாலை திருப்பதி கோவிலின் நடை திறக்கப்பட்டது. அதிகாலை 4.15 மணிக்கு கோயில் தலைமை அர்ச்சகர் வேணுகோபால திட்ஷிதலு தலைமையில் கோவில் நடை திறக்கப்பட்டு முழுவதும் சுத்தம் செய்யப்பட்டது.

பின்னர் சுப்ரபாதம் , கிரகண தோஷ நிவாரண பூஜைகளும், தோமாளை , அர்ச்சனை ஆகிய சேவைகளும் நடைபெற்றன. அதன்பின்னர் சர்வ தரிசனத்தில் பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட்டனர்.