Random image

புதுச்சேரியில் பள்ளி மாணவர்களுக்கு மதியஉணவு: தனியார் அமைப்புடன் அரசு ஒப்பந்தம்

புதுச்சேரி:

புதுச்சேரி அரசு பள்ளி மாணவர்களுக்கு மதிய உணவு வழங்கும் திட்டம் செயல்படுத்த மாநில அரசு முடிவு செய்துள்ளது.

அதன்படி தனியார் நிறுவனமான அட்சய பாத்ரா அறக்கட்டளையுடன் இணைந்து மாநிலம் முழுவதும் உள்ள பள்ளிகளில் மதிய உணவு வழங்கும் திட்டத்தை செயல்படுத்தும் வகையில், புதுச்சேரி கல்வித்துறை இயக்ககம் ஒப்பந்தம் போட்டுள்ளது. இந்த ஒப்பந்தம் இன்று கையெழுத்தானது.

பல மாநிலங்களில் மதிய உணவுத்திட்டம் மாநிலத்தின் நிதி ஆதாரங்களை கொண்டு செயல்படுத்தப்பட்டு வருகிறது.  அதனப்டி, அரசுப் பள்ளிகள் அரசு உதவிபெறும் பள்ளிகள், சிறப்புப்பயிற்சி மையங்கள் ஆகியவற்றில் ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களிடையே ஊட்டச்சத்து அளவை மேம்படுத்தவும், அம்மாணவர்களைத் தொடர்ந்து பள்ளிகளில் படிப்பதை ஊக்குவிக்கவும், பள்ளி மாணவர்களின் சேர்க்கையை அதிகரிக்கவும் மதிய உணவுத் திட்டம் செயல்படுத்தப்படுகிறது.

இந்த நிலையில் புதுச்சேரி மாநிலத்தில் மதிய உணவு திட்டத்தை அமல்படுத்த மாநில காங்கிரஸ அரசு முடிவு செய்தது. அதன்படி, இந்த திட்டத்தை முழுமையாக செயல்படுத்த, அட்சய பாத்ரா அறக்கட்டளையுடன், புதுச்சேரி கல்வித்துறையும் இணைந்து செயலாற்றி வருகிறது.

இதுகுறித்த ஒப்பந்தம் இன்று கையெழுத்தானது.