அமைச்சர்களுக்கு விரைவில் சொகுசுகார்:- தமிழக அரசு ஏற்பாடு

சென்னை:

முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி உள்பட அமைச்சர்கள் 32 பேருக்கும் புதிய சொகுசு கார்கள் வழங்கப்படவுள்ளதாக கூறப்படுகிறது.

இதற்காக, 32 சொகுசு கார்கள் வாங்கப்பட்டு தலைமைச் செயலகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.

ஒரு சொகுசு காரின் விலை 26 லட்சம் ரூபாய் என்றும், விரைவில் நடைபெறவுள்ள விழாவில் முதலமைச்சர் இவற்றை அமைச்சர்களுக்கு வழங்குவார் என்றும் கூறப்படுகிறது. அதன்பின் அமைச்சர்கள் மக்கள் பணியாற்ற இந்தக்காரில்தான் பயணம் செய்வார்கள்.