மக்கள் பணத்தில் ஆடம்பர நினைவிடம்….! அரசுக்கு உயர்நீதி மன்றம் குட்டு

சென்னை:

க்கள் வரிப்பணத்தில் மக்களுக்கான திட்டங்களை செயல்படுத்தாமல், அரசு, ஆடம்பர நினைவிடம் கட்டுவதாக சென்னை உயர்நீதிமன்றம் கண்டனம் தெரிவித்துள்ளது.

குழந்தை கடத்தல் தொடர்பான வழக்குகள்  நீதிபதிகள் சத்தியநாராயணன் மற்றும் சேஷசாயி அமர்வு முன்பு விசார நடைபெற்று வருகிறது. அப்போது தமிழக அரசு சார்பில், தமிழகம் முழுவதும் 3 குழந்தைகள் காப்பகங்கள் மட்டுமே பதிவு செய்யாமல் இருப்பதாக  கூறியது.

இதை ஏற்க மறுத்த நீதிபதிகள், அரசு கூறுவதை நம்ப முடியவில்லை என தெரிவித்தனர். இதைத் தொடர்ந்து,  தமிழகம் முழுவதும் உள்ள குழந்தைகள் காப்பகத்தில் திடீர் ஆய்வு நடத்த வேண்டும் என நீதிமன்றத்திற்கு உதவ நியமிக்கப்பட்ட வழக்கறிஞர் மோகன் தெரிவித்தார்.

இதை ஏற்று கொண்ட நீதிபதிகள்,  அனைத்து குழந்தைகள் காப்பகத்திலும் மாவட்ட சட்டபணிகள் அணையக்குழு அதிகாரிகள் மற்றும் ஆள்கடத்தல் தடுப்பு பிரிவு காவல் துறையினர் இணைந்து திடீர் சோதனை நடத்த வேண்டும் எனக்கூறிய நீதிபதிகள், சோதனை முடிவுகளை புகைப்பட ஆதாரதங்களோடு  பிப்ரவரி 25-ம் தேதிக்குள் தாக்கல் செய்ய உத்தரவிட்டனர்.

விசாரணையின்போது, தமிழக அரசின் பதில் காரணமாக அதிருப்தியடைந்த நீதிபதிகள்,  மக்கள் வரிப்பணத்தில் மக்களுக்கான திட்டங்களை செயல்படுத்தாமல், அரசு ஆடம்பர நினைவிடம் கட்டி  மக்கள் பணத்தை விரயம் செய்து வருகிறது. மக்கள் நலத்திட்டங்களை செயல்படுத்தாமல் இதுபோன்ற பணிகள் செய்வதற்கு  குறைந்தபட்ச குற்ற உணர்ச்சிகூட இல்லையா எனவும் கேள்வி எழுப்பினர்.