பிரிஸ்பேன்: டெஸ்ட் போட்டிகளில், இந்திய அதிரடி ஆட்டக்காரர் ரோகித் ஷர்மாவை, மொத்தம் 6 முறை அவுட்டாக்கியுள்ளார் ஆஸ்திரேலிய சுழற்பந்து வீச்சாளர் நாதன் லயன்.

இந்தியாவின் முதல் இன்னிங்ஸில் ரோகித் ஷர்மாவை அவுட்டாக்கினார் நாதன் லயன். மொத்தம் இரண்டுமுறை, ஒரே டெஸ்ட் போட்டியின் 2 இன்னிங்ஸ்களிலும் ரோகித் ஷர்மாவை அவுட்டாக்கியுள்ளார் லயன்.

கடந்த 2014ம் ஆண்டு அடிலெய்டில் நடைபெற்ற இந்தியா – ஆஸ்திரேலியா போட்டியிலும், அதே அடிலெய்டில் 2018ம் ஆண்டு நடைபெற்ற டெஸ்ட் போட்டியிலும், இரண்டு இன்னிங்ஸ்களிலுமே ரோகித் ஷர்மாவை ஆட்டமிழக்கச் செய்தார் நாதன் லயன்.

அதற்கு முன்னதாக, கடந்த 2015ம் ஆண்டு சிட்னியில் நடைபெற்ற டெஸ்ட் போட்டியில், ரோகித்தை அவுட்டாக்கினார் லயன். தற்போது பிரிஸ்பேனில் 6வது முறையாக அவுட்டாக்கியுள்ளார் லயன்.