வெளியானது ‘நான் சிரித்தால்’ திரைப்படத்தின் ‘தூம் தூம்’ பாடல்…!

‘ஹிப்ஹாப்’ ஆதி நடிப்பில் உருவாகி வரும் படம் நான் சிரித்தால் .

இந்த திரைப்படத்தை இயக்குநர் ராணா இயக்க, ‘தமிழ்ப்படம் – 2’ பட புகழ் ஐஸ்வர்யா மேனன், ஆதிக்கு ஜோடியாக நடித்திருக்கிறார். ‘அவ்னி புரொடக்‌ஷன்ஸ்’ நிறுவனம் சார்பில், சுந்தர்.சி இந்த படத்தை தயாரித்திருக்கிறார். இந்த படத்தின் ஷுட்டிங்கும் டப்பிங் பணிகள் நிறைவடைந்து, வெளியீட்டுக்கு தயாராகி வருகிறது.

இந்நிலையில், இந்த படத்தில் இடம்பெற்றுள்ள தூம் தூம் என்னும் பாடலை வெளியிட்டுள்ளனர் படக்குழு. இப்பாடலை ஹிப்ஹாப் ஆதியே எழுதி பாடி இசையமைத்திருக்கிறார். இவருடன் அனிலா ராஜீவ் இணைந்து பாடியுள்ளார்.