பாடலாசிரியர் முத்துவிஜயன் காலமானார்…!

பிரபல பாடலாசிரியர் முத்துவிஜயன் நேற்று காலமானார். மஞ்சள் காமாலை நோயினால் கல்லீரல் பாதிக்கப்பட்ட முத்து விஜயன் நேற்று மாலை 4 மணிக்கு காலமானார். சென்னை வளசரவாக்கம் மின் மயானத்தில் இவரது உடல் தகனம் நடைபெற்றது.

இதுவரை சுமார் 800இற்கும் அதிகமான பாடல்களை எழுதியுள்ள இவர்,கண்ணுக்குள்ளே உன்னை வைத்தேன் கண்ணம்மா…, மேகமாய் வந்துபோகிறேன்… உள்ளிட்ட காதல் பாடல்கள் மூலம் இரசிகர்களை தன்வசப்படுத்தியவர் .

கவிஞர் தேன்மொழியை காதல் திருமணம் செய்து, பிறகு விவாகரத்து பெற்ற முத்துவிஜயன் தமிழ் திரைப்பட பாடலாசிரியர்கள் சங்கத்தில் தங்கியிருந்தார்.

You may have missed