ரஹ்மானுக்கு ஆறுதல் சொன்ன வைரமுத்து.. பெண்மானுக்குதான் வடக்கில் வரவேற்பு..

சை அமைப்பாளர் ஏஆர்.ரஹ்மான் தமிழ், இந்தி கடந்து ஹாலிவுட் படங் களுக்கு இசை அமைத்து வருகிறார். ஸ்லம் டாக் மில்லினர் ஹாலிவுட் படத்துக்கு இசை அமைத்து 2 ஆஸ்கர் விருதுகள் வென்று வந்தார்.


95ல் தொடங்கி இந்தி படங்களுக்கு இசை அமைத்து வரும் ரஹ்மான் அடுத்தடுத்த ஆண்டுகளில் அதிகளவில் இந்தி படங்களுக்கு இசை அமைத்தார். ஆஸ்கர் விருது வென்றதற்கு பிறகு அவரை இந்தி படங்களிலிருந்து ஓரம் கட்டி வந்தனர். 2020ம் ஆண்டில் அதன் எதிரொலியாக ரஹ்மானுக்கு ’அட்ராங்கி ரே’ என்ற ஒரு இந்தி படம் மட்டுமே கைவசம் உள்ளது, மற்றொரு படம் அவரே தயாரிக்கும் படம். தனக்கு இந்தி பட வாய்ப்புகள் வருவதை பாலிவுட்டில் இருக்கும் ஒரு கூட்டம் தடுத்து பறிப்பதாக ரஹ்மான் பகிரங்கமாக குற்றம் சாட்டினார். இது பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்நிலையில் ரஹ்மானுக்கு கவிப்பேரரசு வைரமுத்து ஆறுதல் கூறி வீடியோ வும் டிவிட்டர் மெசேஜும் வெளியிட்டிருக்கிறார். அதில் அவர் கூறியிருப்பதாவது:

அன்பு ரகுமான்!
அஞ்சற்க.
வட இந்தியக் கலையுலகம்
தமிழ்நாட்டுப் பெண்மான்களைப் பேணுமளவுக்கு
ஆண்மான்களை ஆதரிப்பதில்லை.
இரண்டுக்கும் உயிர்வாழும்
எடுத்துக்காட்டுகள் உண்டு.
ரகுமான்! நீங்கள் ஆண்மான்;
அரிய வகை மான்.
உங்கள் எல்லை
வடக்கில் மட்டும் இல்லை

இவ்வாறு வைரமுத்து கூறி உள்ளார்.