ஆழகிரி – டி.டி.வி. இடையே கள்ளக் கூட்டணி: ஆர்.பி.உதயகுமார் சாடல்

மதுரை:

திமுகவில் இருந்து நீக்கப்பட்ட மு.க.ஆழகிரியும், அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட டிடிவி தினகரனும்,டி.டி.வி. கள்ளக் கூட்டணி வைக்க முயற்சி செய்து வருவதாக தமிழக அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கூறி உள்ளார்.

தமிழகத்தில் திருவாரூ மற்றும் திருப்பரங்குன்றம் தொகுதிகள் காலியாக உள்ளன. இந்த தொகுதிகளில் விரைவில் தேர்தல் நடத்துவற்கான அறிவிப்பு வெளியாகும் சூழல் உள்ள நிலையில், மு.க.அழகிரி மற்றும் டிடிவி தினகரன் இடைத்தேர்தலில போட்டியிடும் நோக்கில் செயல்பட்டு வருகின்றனர்.

இந்த நிலையில்,  தி.மு.க.வில் உறுப்பினர் பதவியிழந்த அழகிரியும் அ.தி.மு.க.வில் உறுப்பினர் பதவியிழந்த டி.டி.வி. தினகரனும் இணைந்து கள்ளக் கூட்டணி அமைத்து இடைத்தேர்தலில் போட்டியிட இருப்பதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன என்று    ஆர்.பி.உதயகுமார் கூறினார்.

மதுரை சிலைமானில் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய அவர், திருவாரூர் தொகுதியில் மு.க.அழகிரியை வெற்றி பெறச் செய்வதன் மூலம் அவரை தி.மு.க.வில் இடம் பிடிக்க செய்யும் நோக்கில், அங்கு டிடிவி தரப்பினர் அழகிரிக்கு ஆதரவாக வேலை செய்து வருகின்றனர்.

மேலும், திருப்பரங்குன்றத்தில் டி.டி.வி. தரப்பினரை வெற்றி பெற அழகிரி தரப்பினர் நடவடிக்கை கள் மேற்கொண்டு வருகின்றனர்…இரு தரப்பினரும் கள்ளத்தனமாக கூட்டணி வைத்து ஆதாயம் அடைய  செயல் பட்டு வருகின்றனர்  என்றும் குற்றம் சாட்டி உள்ளார்.