Random image

பேரணியில் பங்கேற்றவர்களுக்கு நன்றி: மு.க. அழகிரி

சென்னை:

டந்த 5ந்தேதி சென்னையில் நடைபெற்ற கருணாநிதி நினைவு பேரணியில் பங்கேற்றவர்களுக்கு மு.க.அழகிரி நன்றி  தெரிவித்துள்ளார்.

அவர் தெரிவித்துள்ள நன்றி அறிவிப்பில்,

தலைவர் கலைஞரின் உயிரினும் மேலான அன்பு உடன் பிறப்புக்களே… நான், .. ஒரு தலைவன் அல்ல… ஒரு மேடைப் பேச்சாளன் அல்ல… ஒரு நடிகன் அல்ல… தனி மனிதனாய்… தொண்டனாகிய என் வேண்டுகோளை ஏற்று… என் தந்தை தலைவர் கலைஞர் அவர்களின் 30வது நாள் பேரணிக்கு அஞ்சலி செலுத்த என்மீது பாசங்கொண்டு அலைகடலென வருகை தந்த  அனைவருக்கும்  எனது நெஞ்சார்ந்த நன்றியை தங்களின் பாதங்களில் காணிக்கையாக்குகிறேன். என்றும் உங்களின் தொண்டன் மு.க.அழகிரி என்று கூறி உள்ளார்.

கடந்த ஆகஸ்டு  13-ந்தேதி  அன்று தனது குடும்பத்தினருடன் கருணாநிதி நினைவிடம் வந்து அஞ்சலி செலுத்திய மு.க.அழகிரி,, ‘எனது அப்பாவிடம் வந்து ஆதங்கத்தை தெரிவித்தேன். அது என்ன என்பது உங்களுக்கு இப்போது தெரியாது. கருணாநிதியிடம் உண்மையாக விசுவாசம் கொண்ட தொண்டர்கள் அனைவரும் என் பக்கம்தான் இருக்கிறார்கள்’, 5ந்தேதி அமைதி பேரணி நடைபெறும் என்றார்.

அதைத்தொடர்ந்து கடந்த 5ந்தேதி அமைதி பேரணியை வெற்றிகரமாக நடத்தி முடித்தார். இந்த நிலையில், தற்போது பேரணியில் பங்கேற்றவர்களுக்கு நன்றி தெரிவித்து உள்ளார்.