டில்லி,

டில்லி சென்றுள்ள திமுக செயல்தலைவர் மு.க.ஸ்டாலின் அகில இந்திய காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, துணைத்தலைவர் ராகுல்காந்தியை சந்தித்து பேசினார்.

கடந்த 18ந்தேதி நம்பிக்கை வாக்கெடுப்பின்போது  தமிழக சட்டசபையில் நடைபெற்ற அமளி காரணமாக திமுக வெளியேற்றப்பட்டனர். எதிர்க்கட்சியினரே இல்லாமல் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தி வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது.

அதைத்தொடர்ந்து நடைபெற்ற அமளி காரணமாக எதிர்க்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் காவலர்களால் குண்டுகட்டாக தூக்கி வெளியேற்றப்பட்டார். அப்போது தான் தாக்கப்பட்டதாகவும், தனது சட்டை கிளிக்கப்பட்டதாகவும் சபாநாயகர் மீது குறைகூறினார்.

இதுகுறித்து தமிழக கவர்னர் வித்யாசாகர் ராவை சந்தித்து புகார் கொடுத்தார். பின்னர் நேற்று (23-ந்தேதி) ஜனாதிபதியை சந்தித்து சட்டசபை நிகழ்வுகள் குறித்து புகார் கூறினார்.

அதைத்தொடர்ந்து இன்று காலை 10 மணி அளவில் சோனியா காந்தியினி இல்லத்தில்  அகில இந்தியா காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, துணைத்தலைவர் ராகுல்காந்தி ஆகியோரை சந்தித்தார்.

அப்போது தமிழக சட்டமன்றத்தில்  நடைபெற்ற அமளி குறித்தும், வர இருக்கும் உள்ளாட்சி தேர்தல் குறித்தும் ஆலோசனை நடத்தி வருகிறார்.

அவருடன் மூத்த அமைச்சர் துரைமுருகன், டி.கே.எஸ் இளங்கோவன், ஆலந்தூர் பாரதி  மற்றும் திமுகவை சேர்ந்த எம்பிக்கள் உடன் சென்றனர்.

இந்த ஆலோசனையின்போது தமிழக காங்கிரஸ் தலைவரும் உடனிருந்தார்.

இந்த சந்திப்பின்போது திமுக தலைவர் கருணாநிதி உடல்நலம்  குறித்து சோனியா கேட்டறிந்ததாக கூறப்படுகிறது. மேலும் இது ஒரு  மரியாதை நிமித்தமான சந்திப்பு என்று கூறப்படுகிறது.