மின்வெட்டால் சிசிடிவி பணி புரியவில்லை : மத்தியப் பிரதேசத்தில் மற்றுமோர் சர்ச்சை

போபால்

மின்னணு வாக்கு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள பகுதியில் மின் வெட்டு கரணமாக சிசிடிவி பதிவில் இரண்டு மணி நேரம் தடங்கல் ஏற்பட்டுள்ளது.

மத்தியப் பிரதேச சட்டப்பேரவை தேர்தல் கடந்த மாதம் 28 ஆம் தேதி நடைபெற்றது. இந்த தேர்தலுக்கான மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் ஒரு அறையில் வைக்கப்பட்டு பூட்டி சீல் இடப்பட்டுள்ளது. இந்நிலையில் தேர்தல் முடிந்து இரண்டு நாட்களுக்குப் பிறகு 34 மின்னணு இயந்திரங்கள் கொண்டு வரப்பட்டு காவல்துறை கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளன. இது கடும் சர்ச்சையை உண்டாக்கியது.

இந்த வாக்குப்பதிவு இயந்திரங்கள் மூலம் தேர்தலில் முறைகேடு நடந்துள்ளதாக காங்கிரஸ் கட்சி குற்றம் சாட்டியது. அந்த இயந்திரங்கள் மாற்று இயந்திரங்கள் எனவும் இயந்திரங்கள் பழுதடைய நேர்ந்தால் பயன்படுத்த வைக்கப்பட்டிருந்ததாகவும் தேர்தல் ஆணையம் தெரிவித்தது. மேலும் இந்த இயந்திரங்களை தாமதமாக அளித்த ஊழியர் மீது நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது.

வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள அறையில் கண்காணிப்பு காமிராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. இரவு பகல் என 24 மணி நேரமும் அவை நிகழ்வுகளை பதிவு செய்து வருகின்றன. இந்நிலையில் கடந்த 30.11.218 அன்று காலை 8.15 முதல் 9.35 வரை சுமார் இரண்டு மணி நேரத்துக்கு எந்த பதிவும் இல்லை என தெரிய வந்தது, இது குறித்து விசாரித்த போது தேர்தல் ஆணையம் அந்த நேரத்தில் மின்வெட்டு ஏற்பட்டதால் பதிவு ஆகவில்லை என காரணம் தெரிவித்துல்ளது.

இது குறித்து காங்கிரஸ் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் விவேக் தங்கா, “இந்த தேர்தலில் மாநில உள்துறை அமைச்சரின் தொகுதியில் தேர்தல் நடந்து இரு தினங்களுகு பிறகு 34 மின்னணு இயந்திரங்கள் கொண்டு வரப்படுகின்றன. வாக்கு எண்ணிக்கை மையத்துக்கு இயந்திரங்கள் பதிவெண் இல்லாத பேருந்துகள் மூலம் கொண்டு வ்ரப்பட்டதாக கூறப்படுகிறது. முழுமையான பாதுகாப்பு உள்ள இடத்தில் கண்காணிப்பு காமிராக்கள் மின் வெட்டு காரணமாக பணி புரியவில்லை. இவை அனைத்தும் முறைகேடுகளே ஆகும்” என தெரிவித்துள்ளார்.