ஏரில் தன் மகள்களை பூட்டி உழுத ஏழை விவசாயி

செஹோர், ம. பி.

. பி. மாநில செஹோர் மாவாட்டத்தில் ஒரு கிராமத்தில் காளைகள் வாங்க பணம் இல்லாததால் தன் மகளகளை ஏரில் பூட்டி ஒரு ஏழை விவசாயி நிலத்தை உழுதார்.

மத்திய  பிரதேச மாநிலம், செஹோர் மாவட்டத்தில் பசந்த்ப்புர் பங்கிரி என்னும் கிராமத்தில் வாழும் விவசாயி சர்தார் கஹ்லா.  அவருடைய மகள்கள் ராதிகா ( வயது 14) மற்றும் குந்தி (வயது 11).  அவர்கள் இருவரையும் கல்வி கற்க பள்ளிக்கு அனுப்ப வசதி இல்லாததால் சர்தார் பள்ளியிலிருந்து நிறுத்தி விட்டார்.

விவசாயியான சர்தாருக்கு உழவு மாடுகள் வாங்கவோ, பராமரிக்கவோ வசதி இல்லை.  வாடகைக்கு எடுக்கவும் வசதி இல்லை.  வேறு வழியில்லாத சர்தார், தனது இரு மகள்களையும் மாட்டுக்கு பதில் ஏரில் பூட்டி நிலத்தை உழுதார்.

தகவல் அறிந்த செஹோர் மாவட்ட பொது தொடர்பு அதிகாரி கிராமத்து விரைந்து, சர்தாரிடம் பேசினார்.  அப்போது இது போன்ற பணிகளுக்கு குழந்தைகளை பயன்படுத்த வேண்டாம் என்றும் அரசின் திட்டங்களின் மூலம் அவருக்குத் தேவையான உதவிகளை செய்வதாகவும் உறுதி பட கூறினார்.

மத்திய பிரதேச மாவட்டத்தில் ஏற்கனவே பல விவசாயிகள் பணமில்லாமல் தற்கொலை செய்துக் கொண்டனர்.