3வது இந்தியர்: 500 சர்வதேச போட்டிகளில் விளையாடி சாதனை படைத்த தோனிக்கு ‘விசில்’ போடு

டில்லி:

500 சர்வதேச போட்டிகளில் விளையாடி இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் மகேந்திரசிங் தோனி சாதனை படைத்துள்ளார்.

ஏற்கனவே இந்திய வீரர்கள் சச்சின் டெண்டுல்கர், ராகுல் திராவிட்டை தொடர்ந்து, 3வதாக தோனி 500 சர்வதேச போட்டிகளில் விளையாடி உள்ளார்.

டோனி
தோனி

இந்திய அணிக்கு டி20 உலக கோப்பை, ஒருநாள் உலக கோப்பை, சாம்பியன்ஸ் டிராபி ஆகிய மூன்றுவிதமான கோப்பைகளையும் வென்று கொடுத்த ஒரே இந்திய கேப்டன் தல என்று இந்திய கிரிக்கெட் ரசிகர்களால் அழைக்கப்படும் தோனி மட்டுமே. அதற்காக அவருக்கு விசில் போடலாம்.

கிரிக்கெட்டின் கடவுள் என்று ரசிகர்களால்  வர்ணிக்கப்படும்  சச்சின் டெண்டுல்கர் 664 சர்வதேச போட்டிகளில் விளையாடியும், ராகுல்திராவிட் 509 சர்வதேச போட்டிகளிலும் விளையாடி சாதனை படைத்துள்ள நிலையில், தற்போது ரசிகர்களால் தல என்று அன்போடு அழைக்கப்படும் தோனி, 500 சர்வதேச போட்டிகளில் விளையாடி சாதனை புரிந்துள்ளார்.

இந்த சாதனையை உலக அளவில் எற்கனவே 8 வீரர்கள் பெற்றுள்ள நிலையில், தற்போது 9 வீரராக தோனி அந்த பட்டியலில் இட்ம்பிடித்துள்ளார்.

தோனிக்கு நேற்றைய   இங்கிலாந்துக்கு எதிரான 2-ஆவது டி20 போட்டி  500-ஆவது போட்டியாக அமைந்தது.

தோனி இது  90 டெஸ்ட் மேட்ச், 318 ஒருநாள் மேட்ச்  மற்றும் 92 டி20 போட்டிகளில் பங்கேற்று விளையாடி உள்ளார்.

தோனி, இதுவரை ஆடி உள்ள டெஸ்ட் போட்டிகளில் 6 சதம், 33 அரைசதம் உட்பட 4,876 ரன்களும், ஒருநாள் போட்டிகளில் 10 சதம், 67 அரைசதம் உட்பட 9,967 ரன்களும், டி20 போட்டிகளில் 2 அரை சதங்களுடன் 1,455 ரன்களும் குவித்துள்ளார். மேலும் மொத்தம் 602 கேட்சுகளும், 178 ஸ்டம்பிங்கு களும் செய்துள்ளார்.

இந்த வரிசையில் 200 டெஸ்ட், 463 ஒருநாள், மற்றும் ஒரு டி20-யுடன் 664 போட்டிகளுடன் சச்சின் டெண்டுல்கர் முதலிடத்தில் இருந்து வருவது குறிப்பிடத்தக்கது.

கடந்த 2014-ம் ஆண்டு டெஸ்ட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்று விட்ட தோனி,  தற்போது, ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளில் சாதாரண அணி வீரராகவே தொடர்ந்து விளையாடி வருகிறார்.

எந்தவிதமான ஆடம்பரமும், ஆட்டம் பாட்டமும் இல்லாமல், கடந்த 14 ஆண்டுகளாக இந்திய அணியில் தனது பங்கை சிறப்பாக ஆற்றி வரும் தல தோனிக்கு விசில் போடுவோம்.