வீட்டிற்கே மணல் கொண்டுவந்து தரும் புதிய திட்டத்தை அறிமுகப்படுத்தும் தமிழக அரசு

வெளிநாட்டிலிருந்து இறக்குமதி செய்யப்படும் எம் – சாண்ட் மணலை இல்லத்திற்கே சென்று வழங்கும் புதிய திட்டத்தை தமிழக அரசின் பொதுப்பணித்துறை அறிமுகப்படுத்தப்பட உள்ளது. இத்திட்டம் 2019 ஜனவரி முதல் தொடங்கப்பட உள்ளது.

sand

தமிழகத்தில் ஆற்று மணல் கொள்ளை பல இடங்களில் நடப்பதாக மக்கள் போராடி வரும் நிலையில், மணல் தட்டுப்பாட்டை போக்க, தமிழக அரசு வெளிநாடுகளிலிருந்து எம்.சாண்ட் மணல் (செயற்கை மணல்) இறக்குமதி செய்து அதனை விற்பனை செய்கிறது.

வெளிநாட்டிலிருந்து மணல் இறக்குமதி செய்வதற்கான டெண்டர் விடப்பட்டு, டெண்டர் பரிசீலிக்கபட்டு வருவதாக குறிப்பிட்டிருந்தனர். இந்நிலையில் கடந்த ஏப்ரல் 10ம் தேதி தமிழக சிறுகனிம சலுவை விதிகளில் திருத்தங்கள் செய்யப்பட்டு அமலுக்கு வந்தது.

இதில் தமிழக அரசு விதிகளை மீறும் நபருக்கு 2 ஆண்டு சிறை தண்டனை அல்லது 5 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டும் என கூறப்பட்டுள்ளது. மேலும், வெளிநாட்டிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட எம்-சாண்ட் மணலை கடந்த மாதம் 21ம் தேதி முதல் தமிழக அரசு விற்பனை செய்து வருகின்றது.
இதில் மணல் பெற TNsand இணையதளத்திலும், கைப்பேசி செயலி (TNsand app) மூலமாகவும் ஆன்லைனில் கட்டணம் செலுத்தி பதிவு செய்து கொள்ளலாம்.

உச்சநீதிமன்ற உத்தரவுப்படி ஒரு யூனிட் மணல் விலை ரூ.9,990 ஆகும்.
2 யூனிட் – ரூ.19,980
3 யூனிட் – ரூ.29,970
4 யூனிட் – ரூ.39,960
5 யூனிட் – ரூ.49,950

என விலையை தமிழக அரசு நிர்ணயித்துள்ளது.

வெளிநாட்டு மணல் பயனாளர்களின் வீட்டிற்கே சென்று வழங்கப்படும் என அரசு சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த முறை தூத்துக்குடியிலிருந்து சுற்றுவட்டரம் 100 கி.மீ வரை முதல் கட்டமாக செயல்படுத்தப்படும் என கூறப்பட்டுள்ளது.