எம் சாண்ட் மணல் விற்பனைக்கான கொள்கை முடிவு: மாற்றங்களுடன் விரைவில் அறிவிக்கிறது தமிழக அரசு

சென்னை: தமிழகத்தில் எம் சாண்ட் மணல் விற்பனைக்காக கொள்கையை தமிழக அரசு மாற்ற முடிவு செய்துள்ளது.

எம் சாண்ட் மணல் உரிமம், போக்குவரத்து ஆகியவற்றில் இந்த மாற்றங்கள் கொண்டு வரப்படும் என்று தெரிகிறது. உரிமங்களை புதுப்பிக்க தரப்பட்டுள்ள காலக்கெடு, எம் சாண்ட் மணல் தயாரிப்பு யூனிட்கள் ஆகியவற்றில் மாற்றம் செய்ய பொதுப்பணித்துறை திருத்தி உள்ளது. இந்த அறிவிப்புகள் கடந்த சனிக்கிழமை அரசு நிறுவனங்களின் பிரதிநிதிகளுடன் நடத்தப்பட்ட சந்திப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

குவாரிகள், எம் சாண்ட் தயாரிப்பு யூனிட்டுகள் வைத்திருப்பவர்கள், 3 ஆண்டுகளுக்கு பதிலாக, 5 ஆண்டுகளுக்கு ஒரு பொதுப்பணித்துறை வழங்கிய உரிமத்தை புதுப்பித்து கொள்ளலாம். இதேபோன்று, குத்தகைகளை குத்தகைக்கு எடுக்கும் உற்பத்தியாளர்கள் ஒவ்வொரு ஆண்டுக்கு பதிலாக 3 ஆண்டுகளுக்கு ஒரு முறை புதுப்பித்துக் கொள்ளலாம்.

ஆலோசனை கூட்டத்தில் பொதுப்பணித்துறை இணை என்ஜினியரும் வரைவு கொள்கையின் பிரதிநிதியுமான கே.பி. சத்யமூர்த்தி இந்த விவரங்களை தெரிவித்துள்ளார். மாநிலம் முழுவதும் 270 எம் சாண்ட் உற்பத்தி யூனிட்டுகளுக்கு ஒப்புதல் அளித்துள்ளோம், 60 விண்ணப்பங்களில் கிட்டத்தட்ட 450 உற்பத்தியாளர்கள் இன்னும் ஒப்புதல் பெறவில்லை என்றும் அவர் கூறி உள்ளார்.

இந்த கொள்கை நடைமுறைக்கு வந்தவுடன், உற்பத்தி மற்றும் போக்குவரத்து விதிமீறல்களை கட்டுப்படுத்த அதிக அதிகாரங்கள் இருக்கும் என்றார். உதாரணமாக, உரிமங்களை புதுப்பிக்காமல் இருப்பவர்கள், ஒப்புதலின்றி செயல்படுபவர்கள், கலப்படம் செய்பவர்களுக்கு 2 ஆண்டுகள் சிறை தண்டனை, 5 லட்சம் அபராதமும் விதிக்கப்படும். தவறுகளை திருத்திக் கொள்ள அவர்களுக்கு 2 மாதங்கள் அவகாசம் அளிக்கப்படும், 1 லட்சம் அபராதமும் விதிக்கப்படும் என்று கூறினார்.

கூட்டத்தில் பேசிய குவாரி உரிமையாளர்கள், உற்பத்தியாளர்கள் பேசும் போது, விதிகளை மீறும் குவாரிகளுக்கு தடை விதிக்கப்படுவதற்கு பதிலாக, உற்பத்தி பிரிவுகளின் உரிமங்களை மட்டும் ரத்து செய்ய வேண்டும் என்று கேட்டுக் கொண்டனர். அவர்களுக்கு பதிலளித்த அதிகாரிகள், கோரிக்கை பரிசீலிக்கப்படும் என்றனர்.

இது குறித்து தமிழ்நாடு மணல் லாரி உரிமையாளர்கள் சம்மேளனத்தின் தலைவர் செல்ல ராஜமணி கூறியதாவது: உற்பத்தி யூனிட்டுகள் அதிக சுமைக்கு போக்குவரத்துக்கு பொறுப்பேற்கக்கூடாது என்று நாங்கள் கோரினோம். யூனிட்டுகளில் இலவச போக்குவரத்து பாஸ் மற்றும் கண்காணிப்பு கேமராக்களையும் நாங்கள் நாடினோம். எம்-மணல் காய்ந்த பிறகே லாரிகளில் ஏற்றப்படும் என்றார்.