விஜய்சேதுபதியின் ‘மாமனிதன்’ திரைப்பட பாடல் குறித்த அப்டேட்….!
தமிழ் திரையுலகின் சிறந்த இயக்குனர்களில் ஒருவர் சீனு ராமசாமி. கூடல் நகர் படத்தின் மூலம் இயக்குனராக கால்பதித்தவர்.
தற்போது விஜய்சேதுபதி வைத்து மாமனிதன் படத்தை இயக்கி வருகிறார் . சீனு ராமசாமி – விஜய் சேதுபதி கூட்டணி 4-வது முறையாக இணைந்துள்ள இந்த படத்தை யுவன் சங்கர் ராஜா தயாரித்துள்ளார். இந்தப் படத்தில் காயத்ரி நாயகியாக நடித்துள்ளார். குரு சோமசுந்தரம், பேபி மானஸ்வி, அனிகா ஆகியோர் முக்கிய ரோலில் நடித்துள்ளார்கள்.
இப்படத்துக்கு இளையராஜா, கார்த்திக் ராஜா, யுவன்சங்கர் ராஜா ஆகிய மூன்று பேரும் சேர்ந்து இசையமைத்துள்ளனர்.
இந்த படத்துக்கு சுகுமார் ஒளிப்பதிவு செய்துள்ளார். மாமனிதன் படத்தின் ரிலீஸ் தேதி இன்னும் முடிவாகவில்லை. இரண்டு ஆண்டுகளுக்கு மேல் ஆகியும் படம் வெளியாகததால் மிகுந்த கவலையில் இருந்தனர் விஜய் சேதுபதி ரசிகர்கள்.
இந்நிலையில் படத்தின் முதல் பாடல் பற்றிய ருசிகர தகவலை பதிவிட்டுள்ளார் இயக்குனர் சீனு ராமசாமி. முதல் பாடலை இசைஞானி இளையராஜா இசையமைத்துள்ளதாகவும், விரைவில் வெளிவரவிருப்பதாகவும் பதிவிட்டுள்ளார்.