வெங்கட் பிரபு இயக்கத்தில் சிலம்பரசன் நடித்து வரும் திரைப்படம் மாநாடு. இந்த படத்தை சுரேஷ் காமாட்சியின் வி ஹவுஸ் ப்ரோடுக்ஷன் தயாரிக்கிறது. யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கிறார். ரிச்சர்ட் M நாதன் ஒளிப்பதிவு செய்கிறார். பிரவீன் KL எடிட்டிங் செய்யவுள்ளார். கொரோனா வைரஸ் பிரச்சனையால் நிறுத்தி வைக்கப்பட்ட படப்பிடிப்பு மீண்டும் துவங்கி நடைபெற்று வருகிறது.

புதுச்சேரியில் நடந்து வரும் மாநாடு படப்பிடிப்பில் சிம்பு நடித்து வருகிறார். மாநாடு படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் செகண்ட் லுக் போஸ்டர்கள் கடந்த வாரம் நவம்பர் 21-ம் தேதி வெளியாகி அசத்தியது.

இந்நிலையில் மாநாடு ஷூட்டிங் ஸ்பாட்டில் சிலம்பரசன் எடுத்து கொண்ட செல்ஃபி புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது. ஒரு புகைப்படத்தில் பிரேம்ஜி, கருணாகரன், அஞ்சனா கீர்த்தி ஆகியோர் உள்ளனர். மற்றோரு புகைப்படத்தில் மேக்கப் ரூமில் இருந்து சிம்பு செல்ஃபி எடுப்பது போல் உள்ளது.