சிம்புவின் மாநாடு படத்தின் மோஷன் போஸ்டர் வெளியாகி ரசிகர்களை கவர்ந்தது.மோஷன் போஸ்டரில் இடம்பெற்ற யுவன் ஷங்கர் ராஜாவின் பின்னணி இசை ரசிகர்களின் இதயத்தை அதிர வைக்கிறது.

மாநாடு படத்தை சுரேஷ் காமாட்சியின் வி ஹவுஸ் ப்ரோடுக்ஷன் தயாரிக்கிறது.

கல்யாணி ப்ரியதர்ஷினி ஹீரோயினாக நடிக்க SJ சூர்யா முக்கிய ரோலில் நடிக்கிறார். மேலும் SA சந்திரசேகர், கருணாகரன், உதயா, சுப்பு பஞ்சு, டேனியல் பாப், பிரேம்ஜி, YG மகேந்திரன், மனோஜ் பாரதிராஜா ஆகியோர் நடிக்கின்றனர். ரிச்சர்ட் M நாதன் ஒளிப்பதிவு செய்து வருகிறார்.

இந்நிலையில் மாநாடு படத்தின் படப்பிடிப்பு குறித்து பதிவு செய்துள்ளார் தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி. புதிய ஷூட்டிங் ஸ்பாட் புகைப்படங்களை பகிர்ந்துள்ளார். இதில் சிம்பு நடிக்கும் முக்கிய காட்சிகள் படமாக்கப்பட உள்ளதாம்.