‘மாநகரம்’ படத்தின் இந்தி ரீமேக் தலைப்புடன் அதிகாரபூர்வமாக அறிவிப்பு….!
2017-ம் ஆண்டு மார்ச் 10-ம் தேதி வெளியான படம் ‘மாநகரம்’. இதன் மூலமாக லோகேஷ் கனகராஜ் இயக்குநராக அறிமுகமானார். இப்படம் விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் மாபெரும் வரவேற்பைப் பெற்றது.
தற்போது இந்தியில் ரீமேக் ஆகிறது ‘மாநகரம்’. ஒளிப்பதிவாளர் சந்தோஷ் சிவன் இயக்கவுள்ள இந்தப் படத்தை ஷிபு தமீன்ஸ் தயாரிக்கவுள்ளார். ‘மாநகரம்’ இந்தி ரீமேக்கில் ஒரு நாயகனாக விக்ராந்த் மாசே, விஜய் சேதுபதி, தன்யா மாணிக்டலா, ஹ்ரிது ஹரூன், சஞ்சய் மிஸ்ரா, ரன்வீர் ஷோரே மற்றும் சச்சின் கடேகர் ஆகியோர் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.
‘மும்பைகர்’ எனத் தலைப்பிடப்பட்டு, பிரத்தியேக போஸ்டரும் வெளியிடப்பட்டுள்ளது. இதனை கரண் ஜோஹர் மற்றும் ராஜமெளலி ஆகியோர் வெளியிட்டுள்ளனர்.
Promises to be a stunning cinematic experience! A @santoshsivan film!!! @VijaySethuOffl @masseysahib #tanyamaniktala #hridhuharoon #sanjaymishra @RanvirShorey #sachinkhedekar my best wishes to this exceptionally talented team of artists! pic.twitter.com/V15qQZC1DN
— Karan Johar (@karanjohar) January 1, 2021