2017-ம் ஆண்டு வெளியான படம் ‘மாநகரம்’. இதன் மூலமாக லோகேஷ் கனகராஜ் இயக்குநராக அறிமுகமானார்.

இப்படம் விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் மாபெரும் வரவேற்பைப் பெற்றது.

இதனிடையே, ‘மாநகரம்’ படமும் இந்தியில் ரீமேக் ஆகிறது. ஒளிப்பதிவாளர் சந்தோஷ் சிவன் இயக்கவுள்ள இந்தப் படத்தை ஷிபு தமீன்ஸ் தயாரிக்கவுள்ளார்.

‘மாநகரம்’ இந்தி ரீமேக்கில் ஒரு நாயகனாக விக்ராந்த் மாசே ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். இன்னொரு நாயகன் மற்றும் நடிகர் தேர்வு மும்முரமாக நடைபெற்று வருகிறது.