மாதவனின் ‘மாறா’ திரைப்படத்தின் கேரக்டர் ப்ரோமோ வீடியோ வெளியீடு….!

 

கடந்த 2015-ம் ஆண்டு மலையாளத்தில் வெளியாகி அமோக வரவேற்பை பெற்ற படம் சார்லி. இப்படம் இன்று வரை தமிழ் சினிமா ரசிகர்களின் ஃபேவரைட்டாக உள்ளது. தமிழில் மாறா என்ற பெயரில் ரீமேக்காகிறது.

இந்த படத்தை அறிமுக இயக்குனர் திலீப் குமார் இயக்குகிறார். மாதவன் மற்றும் ஸ்ரத்தா ஸ்ரீநாத் இதில் முக்கிய ரோலில் நடிக்கின்றனர்.

ஜிப்ரான் இசையமைக்கும் இந்த படத்திற்கு கவிஞர் தாமரை பாடல் வரிகள் எழுதியுள்ளார். புவன் ஸ்ரீனிவாசன் படத்தொகுப்பு செய்கிறார். ஸ்டாண்டப் காமெடியன் அலெக்ஸ் இதில் திரைக்கதை எழுதியுள்ளார். பிரதீக் சக்ரவர்த்தி மற்றும் ஸ்ருதி நல்லப்பா தயாரித்த இந்த படம் ஜனவரி 8 -ம் தேதி அமேசான் ப்ரைம் தளத்தில் வெளியாகவுள்ளதாக அறிவிக்கப்பட்டிருந்தது .

இந்நிலையில் படத்தின் கேரக்டர் ப்ரோமோ காட்சி தற்போது வெளியானது. ஸ்டாண்ட் அப் காமெடியன் அலெக்ஸ் திருடன் பாத்திரத்தில் நடித்துள்ளார். Meet The Thief என்ற ப்ரோமோ திரை விரும்பிகளை கவர்ந்து வருகிறது.