சுதா கொங்கரா இயக்கத்தில் சூர்யா, அபர்ணா பாலமுரளி உள்பட பலர் நடித்து வரும் ‘சூரரை போற்று’ படம், நிகேத் பொம்மிரெட்டி ஒளிப்பதிவில் சதீஷ் சூர்யா படத்தொகுப்பில் ஜாக்கியின் கலை இயக்கத்தில் உருவாகி வருகிறது.

சூர்யாவின் 2D எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் இந்த படத்தை தயாரிக்கின்றது.

இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் குறித்து பல்வேறு விவாதங்கள் சமூக வலைதளங்களில் நடந்து வந்தது. டீசர் வெளியாகி, இணையத்தில் டிரெண்டாகி வந்தது.

இந்நிலையில் இப்படத்தில் நடிகர் சூர்யா அவர்களின் குரலில் maraatheme என்ற பாடல் உருவாகியுள்ளது.

இந்த தீம் பாடல் இந்த வாரத்திற்குள் வெளிவரும் என்று இசையமைப்பாளர் ஜி.வி. பிரகாஷ் தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.