மாரி 2.. ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு
தான் நடிக்கும் மாரி 2 படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை இன்று தனுஷ் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டார்.
பாலாஜி மோகன் இயக்கத்தில் தனுஷ் தயாரித்து நடிக்கும் படம் மாரி 2. இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் நவம்பர் 2ம் தேதி வெளியிடப்படும் என்று அறிவிக்கப்பட்டது. இதன்படி ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் இன்று வெளியிடப்பட்டது. இதை தனுஷ் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.
பூப்போட்ட சட்டை, முறுக்கு மீசை, நிறைய நகைகள்.. என வித்தியாசமான கெட் அப்பில் தனுஷ் காட்சி அளிக்கிறார்.
படம் டிசம்பர் மாதம் வெளியாக உள்ளது.
படத்தை பார்க்க ஆவலாக இருப்பதாக தனுஷின் அண்ணன் செல்வராகவன் ட்வீட் செய்திருக்கிறார்.