டிசம்பர் 21ந்தேதி வெளியாகிறது தனுஷின் ‘மாரி-2’

னுஷ் நடித்துள்ள மாரி-2 படம் அடுத்த மாதம் (டிசம்பர்) 21ந்தேதி வெளியாக உள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டு உள்ளது.

பாலாஜி மோகன் இயக்கத்தில் தனுஷ் நடிப்பதில் கடந்த  2015ம் ஆண்டு வெளிவந்த படம் ‘மாரி’.  இந்த படத்தில், ஏரியா தாதாவாக தனுஷ் நடித்திருந்தார். இது அவரது  ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.

அதைத்தொடர்ந்து  மாரி படத்தின் 2ம் பாகம் படப்பிடிப்பு தொடர்ந்து நடைபெற்று வருகிறது. முதல்பாகத்தை இயக்கிய பாலாஜி மோகனே 2ம் பாகத்தையும் இயக்கி வருகிறார்.

இந்த படத்தில் தனஷூக்கு ஜோடியாக  சாய் பல்லவி நடித்து வருகிறார். மேலும், வரலட்சுமி சரத்குமார், ரோபோ சங்கர் உள்பட நட்சத்திர பட்டாளம் நடித்து வருகிறது. படத்திற்கு வன் சங்கர் ராஜா இசையமைத்து வருகின்றனர்.

மாரி-2  படத்தின்    ஃபர்ஸ்ட் லுக்  நவ.2 ம் தேதி வெளியாகி அவரது ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ள நிலையில், தற்போது படம் வெளியாகும் தேதி அறிவிக்கப்பட்டு உள்ளது.

அதன்படி மாரி – 2 படம் அடுத்த மாதம் (டிசம்பர்) 21ந்தேதி வெளியகும் என அறிவிக்கப்பட்டு உள்ளது.

Leave a Reply

Your email address will not be published.