‛மாருதா’ புயல்”: தமிழகத்தில் மழை பெய்யும்

--

சென்னை: வங்கி கடலில் உருவாகியுள்ள ‛‛ மாருதா” புயலால் தமிழகத்தில் ஆங்காங்கே மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அந்தமான் தீவுகள்  அருகே வங்க கடலில் நிலை கொண்டிருந்த  குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம்  தற்போது காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறி பிறகு புயலாக மாறியுள்ளது. இந்த புயலுக்கு மாருதா என பெயரிடப்பட்டுள்ளது.

தமிழகத்தில் கடந்த சில நாட்களாக கடுமையான வெயில் மக்களை வதைத்துக்கொண்டிருக்கிறது.   ஆகவே மக்கள் மழையை எதிர்பார்த்து காத்திருக்கிறார்கள்.

மாருதா  புயலால் தமிழகத்திற்கு பெரிய அளவில் மழை  பெய்யாது எனினும் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய மழை பெய்யும் என்று வாநிலை ஆய்வு மையம் தெரவித்துள்ளது.