மாசிடோனியா நாட்டின் பாராளுமன்றம் பெயர் மாற்றத்துக்கு ஒப்புதல்

ஸ்கோப்ஜே, மாசிடோனியா

மாசிடோனியா நாட்டின் பெயர் மாற்றத்துக்கு அந்நாட்டு பாராளுமன்றம் ஒப்புதல் அளித்துள்ளது.

 

கடந்த 1991ல் யூகோஸ்லேவியா உடைந்த பின் மாசிடோனியா சுதந்திரம் அடைந்தது. இந்தப் பெயருக்கு அண்டை நாடான கிரிஸ் ஆட்சேபித்து வந்தது. அந்நாட்டின் வடபகுதி மாசிடோனியா என அழைக்கப்படுகிறது. ஆகவே ஒரே பெயர் உள்ளதால் அபகுதியையும் மாசிடோனியா உரிமை கோரலாம் என கிரீஸ் நாட்டுக்கு அச்சம் உண்டானது.

தனது எதிர்ப்பை காட்ட ஐரோப்பிய யூனியன் அமைப்பிலும் நேட்டோ அமைப்பிலும் மாசிடோனியா நாடு இணைய கிரீஸ் தடை விதித்தது. ஆகவே மாசிடோனியா நாடு பெயர் மாற்றம் செய்யும் தீர்மானத்தை அந்நாட்டு பாராளுமன்றத்தில் தாக்கல் செய்தது. அந்த தீர்மானத்துக்கு பாராளுமன்றம் ஒப்புதல் அளித்துள்ளது.

இனி மாசிடோனியாவின் புதிய பெயராக வடக்கு மாசிடோனியா குடியரசு என அழைக்கப்படும். இவ்வாறு பெயர் மாற்றம் செய்ததால் கிரீஸ் நாடு ஐரோப்பிய யூனியன் அமைப்பு மற்றும் நேட்டோ அமைப்பில் இணைய ஒப்புதல் அளிப்பதில் தடை சொல்லாது என பாராளுமன்றம் தெரிவித்துள்ளது.