மச்சி பட இயக்குனர் கே.எஸ். வசந்தகுமார் காலமானார்!

சென்னை:

ச்சி பட இயக்குனர் கே.எஸ். வசந்தகுமார் மாரடைப்பால் காலமானார்.

இவர் கடந்த 2004 ஆம் ஆண்டு சிவாஜியின் பேரன்  துஷ்யந்த் மற்றும் சுபா பூஞ்சா நடிப்பில் உருவான மச்சி என்ற படத்தில் அறிமுகமானார். இந்த படம் எதிர்பார்த்த அளவுக்கு வெற்றியை கொடுக்கவில்லை. அதன்பிறகு புதுமுகங்கள் நடித்த ஒரு ஊர்ல என்ற படத்தை இயக்கினார்.

இந்த படமும் ஓடாத நிலையில், படவாய்ப்புகள் இன்றி சென்னையில் வசித்து வந்தார். இவருக்கு  மனைவி கண்மணி, மகள் வர்ஷினி, மகன் யுவன் ஆகியோர் உள்ளனர்.

சென்னை வடபழனி சாலிகிராமம் தேவராஜ் நகரில் வசித்து வந் வசந்தகுமாருக்கு நேற்று திடீரென மாரடைப்பு ஏற்பட்டது. உடனடியாக அருகில் உள்ள மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி இறந்தார்.

இன்று மதியம் அவரது இறுதி சடங்குகள் நடக்கிறது. வசந்தகுமார் உடலுக்கு இயக்குனர்கள் உள்ளிட்ட திரையுலக பிரமுகர்கள் அஞ்சலி செலுத்தினார்கள்.